தென்காசியில் பாழடைந்த குளத்தில் மிதந்த கருப்பு உருவம்.. "கை" மட்டும் வெள்ளையா? கிட்டபோய் பார்த்தால்?
தென்காசி: தென்காசி கொல்லம் - மதுரை தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள பாழடைந்த குளத்தில் அந்த உருவத்தை பார்த்ததுமே, அப்பகுதி மக்கள் நிலைகுலைந்துவிட்டனர்.. இதுகுறித்து மாவட்ட எஸ்.பியே. நேரில் சென்று விசாரணையை மேற்கொண்டு வருகிறார்.
தமிழகத்தில், நாளுக்கு நாள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து கொண்டே வருகின்றன.. குடும்ப வன்முறைகளால் பாதிக்கப்படுவது பெரும்பாலும் பெண்களாகவே இருந்து வரும்நிலையில், பாலியல் வன்கொடுமைகளாலும் பெண்களே பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள். அதிலும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு என்பதே கேள்விக்குறியாகி வருகிறது.

பெண்கள்: பள்ளிகளிலும் ஆசிரியர்களே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தருகிறார்கள், சிறுவர்களுக்கு பெண்களே பாலியல் தொல்லை தந்து, போக்சோவில் கைதாகிறார்கள்.. ஓடும் ரயிலில் பெண் பயணிகளின் பாதுகாப்பும் கிலியை தந்து கொண்டிருக்கிறது. இந்த குற்றங்களை தடுக்க தமிழக அரசு கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. எனினும், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து கொண்டேயிருக்கின்றன.
தமிழகத்தில் குற்றங்கள் அதிகரிக்க காரணமே மதுவிற்பனைதான் என்றும், உடனடியாக மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளன. எனினும், சட்டம் ஒழுங்கு சீர்குலைவை தடுக்கும் முயற்சியில் தமிழக காவல்துறை தீவிரமாக இறங்கி உள்ளது.
பாழடைந்த குளம்: இப்படிப்பட்ட சூழலில், தென்காசியில் இளம்பெண்ணின் சடலம் மிகப்பெரிய அதிர்ச்சியை அம்மாவட்ட மக்களுக்கு தந்து வருகிறது.. இலத்தூர் பகுதியில் கொல்லம் - மதுரை தேசிய நெடுஞ்சாலை அருகே, ஒரு பாழடைந்த குளம் உள்ளது.. இந்த குளத்தில் பெண்ணின் சடலம் ஒன்று கிடப்பதாக, அந்த பகுதி முழுவதும் தகவல் பரவியது.. இதையடுத்து தகவலறிந்த போலீசார் , தடயவியல் நிபுணர்களுடன் விரைந்து வந்து, பாழடைந்த குளத்தில் பெண்ணின் சடலத்தை கைப்பற்றினார்கள்.
அந்த இளம்பெண்ணின் உடல் முழுமையாக எரிந்த நிலையில் காணப்பட்டது. மேலும், சில மது பாட்டில்கள் அங்கு சிதறி கிடந்தன.. இந்த இளம்பெண் யார் என்று தெரியவில்லை.. யாராவது இளம்பெண்ணை அழைத்து வந்து கொலை செய்தார்களா? அல்லது வேறு எங்காவது கொலை செய்துவிட்டு, ஊருக்கு ஒதுக்குப்புறமான இந்த குளத்தில் கொண்டு வந்து வீசிவிட்டு சென்றார்களா? என்றும் தெரியவில்லை. இதனால், சடலத்தை கைப்பற்றி விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.
விசாரணை: எரித்து கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கு சுமார் 30 வயதிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ஆனால், பெண்ணின் உடல் முழுவதும் எரிந்தாலும், அவரின் கைகள் மட்டும் எரியாமல் இருக்கிறதாம்.. அதனால், போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்தால்தான், பெண்ணின் மரணத்துக்கு காரணம் தெரியவரும் என்கிறார்கள்.. மேலும், அந்த பகுதியில் காணாமல் போன இளம்பெண்களின் லிஸ்ட்டை வைத்தும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்த தகவல் தென்காசியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும்நிலையீல், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தும், நேரிலேயே சென்று விசாரணையை நடத்தி கொண்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications