தென்காசி தொகுதி: 6 முறை தோல்வியைத் தழுவிய டாக்டர் கிருஷ்ணசாமிக்கு முதல் முறை வெற்றி கிடைக்குமா?

Subscribe to Oneindia Tamil

தென்காசி: தென்காசி லோக்சபா தொகுதியில் தேவேந்திர குல வேளாளர் அமைப்புகளின் தலைவர்களான டாக்டர் கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன் ஆகியோர் மோதுகின்றனர்.

தென்காசி லோக்சபா தொகுதி: ராஜபாளையம், திருவில்லிபுத்தூர் - ஶ்ரீவிலிப்புத்தூர் (தனி), சங்கரன்கோவில்(தனி), வாசுதேவநல்லூர் (தனி),
கடையநல்லூர், தென்காசி.

Tenkasi Lok Sabha constituency Candidate List Assembly Constituencies Voters Count and Election Results

தென்காசி லோக்சபா தொகுதி மொத்த வாக்காளர்கள்-15,16,183; ஆண்கள்- 7,42,158; பெண்கள்- 7,73,822; 3-ம் பாலினத்தவர்- 203

2009-ம் ஆண்டு தேர்தல் முடிவுகள்

பி. லிங்கம்(சிபிஐ) 2,81,174
வெள்ளைபாண்டி(காங்கிரஸ்) 2,46,497
டாக்டர் கிருஷ்ணசாமி(புதிய தமிழகம்) 1,16,685
இன்பராஜ்(தேமுதிக) 75,741

2014-ம் ஆண்டு தேர்தல் முடிவுகள்

வசந்தி முருகேசன்(அதிமுக) 4,24,586
டாக்டர் கிருஷ்ணசாமி(புதிய தமிழகம்) 2,62,812
சதன் திருமலை குமார்(மதிமுக) 1,90,233
ஜெயக்குமார்(காங்கிரஸ்) 58,963
பி. லிங்கம்(சிபிஐ) 23,528

2019-ம் ஆண்டு தேர்தல் முடிவுகள்

தனுஷ் எம். குமார்(திமுக) 4,76,156
டாக்டர் கிருஷ்ணசாமி(அதிமுக) 3,55,870
எஸ். பொன்னுத்தாய்(அமமுக) 92,116
எஸ். எஸ். மதிவாணன்(நாம் தமிழர் கட்சி) 59,445
கே. முனீஸ்வரன்(மக்கள் நீதி மய்யம்) 24,023

2024-ல் களம் காணும் வேட்பாளர்கள்

ராணி ஸ்ரீகுமார்(திமுக)
டாக்டர் கிருஷ்ணசாமி (அதிமுக)
ஜான் பாண்டியன்(பாஜக)
இசைமதிவாணன்( நாம் தமிழர் கட்சி)

தென்காசி கள நிலவரம்: 1957 முதல் 1996-ம் ஆண்டு வரை தொடர்ச்சியாக 10 முறை காங்கிரஸ் கட்சி வென்ற தொகுதி. அதிமுக 3 முறை, சிபிஐ 2 முறை, திமுக ஒரு முறை வென்ற தொகுதி. திமுக கூட்டணி பொதுவாக கூட்டணி கட்சிக்குதான் இத்தொகுதியை ஒதுக்கும். இம்முறை நேரடியாக களம் காண்கிறது. புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ஒவ்வொரு லோக்சபா தேர்தலிலும் ஏதோ ஒரு கூட்டணியில் இடம் பெற்று எப்படியாவது வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் போட்டியிட்டு வருகிறார். இம்முறை அதிமுக கூட்டணியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். அதேநேரத்தில் பாஜகவின் தாமரை சின்னத்தில் ஜான் பாண்டியன் போட்டியிடுகிறார். இதனால் இத்தொகுதியில் கள நிலவரம் கடுமையானதாகவே இருக்கிறது. விவசாயம் பிரதானமானதாக இருந்தாலும் விசைத்தறி முக்கியமானதாக இருக்கிறது. குற்றாலம் உள்ளிட்ட பகுதிகள் சுற்றுலாவை நம்பி இருக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+