குளத்தில் பதுங்கிய ரவுடி! ட்ரோன் உதவியுடன் தட்டி தூக்கிய காவலர்கள்! கெத்து காட்டிய தென்காசி போலீஸ்
தென்காசி: தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்த சாகுல் ஹமீது என்பவர் பதுங்கி இருந்த இடத்தை ட்ரோன் மூலம் கண்டுபிடித்து போலீசார் கைது செய்த சம்பவம் இணையத்தில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த சேர்ந்த சாகுல் ஹமீது என்ற நபர் ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. தென்காசி போலீசார் இந்த சாகுல் ஹமீது என்பவரைக் கொலை முயற்சி வழக்கு தொடர்பாகத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
அவரை தற்போது தென்காசி போலீசார் கண்டுபிடித்து, கைது செய்துள்ள சம்பவம் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கொலை முயற்சி
இந்நிலையில், இவர் கடந்த இரு நாட்களுக்கு முன்னர், தென்காசி பச்ச நாயக்கன் பொத்தை குளம் பகுதியில் பதுங்கி உள்ளார். மேலும், அப்பகுதியைத் தான் ஆக்கிரமித்து உள்ளதாகவும் அங்கு யாரும் வரக்கூடாது என்றும் சாகுல் ஹமீது பொதுமக்களை மிரட்டியும் அச்சுறுத்தியும் வந்துள்ளார். மேலும் அங்கு அங்கு ஆடு மேய்க்கச் சென்ற பீர் முகம்மது என்ற நபரை சாகுல் ஹமீது பயங்கர ஆயுதங்களால் தாக்கியதாகவும் அதில் பீர் முகமது படுகாயம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

குளத்தில் பதுங்கிய ரவுடி
படுகாயமடைந்த பீர் முகமது அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாகவும் தென்காசி போலீசார் சாகுல் ஹமீதை தீவிரமாகத் தேடி வந்தனர். போலீசாரிடம் இருந்து தப்பிக்க அவர் பொத்தை குளம் பகுதியில் மறைந்துள்ளார். மேலும் இன்று காலை அப்பகுதிக்குக் குளிக்கச் சென்ற பெண்களையும் அவர் மிரட்டி, அங்கிருந்து விரட்டி அடித்துள்ளார்.

ட்ரோன் உதவி
பொத்தை குளம் சுமார் 50 ஏக்கர் பரப்பளவு கொண்ட குளம் என்பதால் அவரை பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் குளத்தில் சாகுல் ஹமீது எங்கே பதுங்கி உள்ளார் என்பதை ட்ரோன் மூலம் கண்டுபிடித்து கைது செய்ய போலீசார் முடிவு செய்தனர். ட்ரோன் விமானம் மூலம் அந்த குளத்தை ஆய்வு செய்த போது, குளத்தின் நடுவே பயங்கர ஆயுதங்களுடன் சாகுல் ஹமீது பதுங்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கைது
அதன் பின்னர் போலீசார், சாகுல் ஹமீது பதுங்கி இருந்த இடத்திற்குச் சென்று, மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் அவரை கைது செய்தனர். தொடர் குற்றங்களில் ஈடுபட்டுவந்த ரவுடியின் இருப்பிடத்தை டிரோன் உதவியுடன் கண்டறிந்து, விவேகமாகக் கைது செய்த தென்காசி போலீசாரின் இந்த செயலை மக்கள் பாராட்டி வருகின்றனர். மேலும், இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் டிரெண்டிங்கில் உள்ளது.
-
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு












Click it and Unblock the Notifications