தென்காசி வெண்ணிலா எடுத்த முடிவு.. எந்த தாயும் செய்யக்கூடாத செயல்.. ஆடிப்போன புளியங்குடி
தென்காசி: தென்காசி மாவட்டம் புளியங்குடி அருணாசல விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராமசாமி விவசாயி ஆவார். இவருடைய மனைவி வெண்ணிலா. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். குடும்பத் தகராறில் வெண்ணிலா தனது குழந்தை முகிலுடன் கிணற்றுக்கு சென்றார். அடுத்து அவர் செய்த வேலை உறவினர்களை ஆடிப்போக வைத்துள்ளது.
குடும்ப சண்டையில் சில பெண்கள் உணர்ச்சி வேகத்தில் முடிவெடுப்பது அதிகரித்து வருகிறது. கணவன் மனைவி இடையே ஏற்படும் சண்டை பிள்ளைகள் வரை பாதிக்கிறது. கணவன் மனைவி வாங்கிய கடனுக்காக பிள்ளைகளுக்கு பெற்றோரே எமனாக மாறும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது.

அதேபோல் கணவன் செய்த தவறுக்காக வாழ்க்கையை முடித்துக் கொள்வது போன்ற முட்டாள்தனமான செயல்களை சில பெண்கள் செய்கிறார்கள். அந்த முட்டாள்தனத்தின் போது, தனது குழந்தைக்கு அவர்களே எமனாகிவிடுகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு முடிவினை தான் புலியங்குளம் வெண்ணிலா எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
தென்காசி மாவட்டம் புளியங்குடி அருணாசல விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த விவசாயி ராமசாமி என்பவருடைய மனைவி வெண்ணிலாவுக்கு 28 வயது ஆகிறது. இவர்களுக்கு பவித்ரா என்ற பெண் குழந்தையும், முகில் என்ற 10 மாத ஆண் குழந்தையும் இருந்தார்கள். நன்றாக சென்ற இவர்கள் வாழ்க்கையில் திடீரென ஏற்பட்ட குடும்பத்தகராறு பெரிய வேதனையை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி மாவட்டம் புளியங்குடியில் இருந்து மணக்கடையார் கோவில் செல்லும் சாலையில் ஒருவருக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள கிணற்றில் ஒரு இளம்பெண் மற்றும் கைக்குழந்தை உடல்கள் மிதப்பதாக புளியங்குடி போலீசாருக்கு நேற்று காலையில் தகவல் வந்தது. இதையடுத்து தகவல் அறிந்து புளியங்குடி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஷியாம்சுந்தர், சப்-இன்ஸ்பெக்டர் மாடசாமி மற்றும் வாசுதேவநல்லூர் தீயணைப்பு நிலைய அலுவலர் முருகன் தலைமையில் வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கிணற்றில் இறங்கி இளம்பெண் மற்றும் குழந்தையின் உடலை மீட்டார்கள்.
போலீசாரின் விசாரணையில், இறந்தவர் வெண்ணிலா மற்றும் அவருடைய 10 மாத குழந்தை முகில் என்பது தெரிய வந்தது. அவர்களுடைய உடல்களை பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். குடும்பத் தகராறில் வெண்ணிலா தனது குழந்தை முகிலுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்பது போலீசாருக்கு தெரியவந்தது. எனினும் வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்ற கோணத்திலும் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் தென்காசி மாவட்டம் புளியங்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 2464 0050 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications