மருது சகோதரர்கள் நினைவிடத்தில் தி.மு.க.வினர் போராட்டம்... அ.தி.மு.க.வினரும் குவிந்ததால் பரபரப்பு!!
திருப்பத்தூர்: சுதந்திரப் போராட்ட மாவீரர்கள் மருது சகோதரர்களின் நினைவு நாளையொட்டி திருப்பத்தூரில் உள்ள நினைவிடத்தில் தமிழக அமைச்சர் கோகுல இந்திரா, தி.மு.க. எம்.எல்.ஏ. பெரியகருப்பன், ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோ உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். அந்த இடத்தில் தமிழக அரசின் பிரசார வாகனத்தை அகற்றக் கோரி தி.மு.க.வினர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பி ஊமைத்துரைக்கு அடைக்கலம் அளித்தததால் ஆங்கிலேயர்கள் மருது சகோதரர்கள் மீது போர் தொடுத்து சிறை பிடித்தனர்.
பெரிய மருது, சின்ன மருது என அழைக்கப்படும் மருது சகோதரர்கள் 1801-ம் ஆண்டு அக்டோபர் 24-ந் தேதி திருப்பத்தூர் காளையார்கோவிலில் தூக்கிலிடப்பட்டனர். மருது சகோதரர்கள் நினைவு நாளையொட்டி தமிழக அமைச்சர்கள் கோகுல இந்திரா உள்ளிட்டோர் மருது சகோதரர்கள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
அதேபோல் தி.மு.க.வின் எம்.எல்.ஏ. பெரிய கருப்பன், ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோ உள்ளிட்டோரும் மலரஞ்சலி செலுத்தினர். அப்போது தமிழக அரசின் பிரசார வாகனம் அங்கு நிறுத்தப்பட்டிருந்தது.
இதற்கு தி.மு.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் பெரிய கருப்பன் தலைமையில் தர்ணா போரட்டம் நடத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க.வினர் அங்கு குவிந்ததால் பதற்றம் ஏற்பட்டது. இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்படாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications