கூடங்குளம்: இன்று முதல் வெப்ப நீர் சோதனை... சத்தம் கேட்டால் பயப்பட வேண்டாம் என வேண்டுகோள்!
நெல்லை: கூடங்குளம் அணு உலையில் இரண்டாவது கட்டமாக எரிபொருள் நிரப்பும் பணி நிறைவடைந்துள்ளது. இன்று முதல் வெப்ப நீர சோதனை ஓட்டம் நடைபெற இருக்கிறது.
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் தலா 1000 மெகா வாட் திறன் கொண்ட இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. முதல் அணு உலையில் கடந்த 2013ம் ஆண்டு அக்டோபர் மாதம் மின் உற்பத்தி துவங்கியது. அது 2014ம் ஆண்டு ஜூலையில் 1000 மெகா வாட் மின் உற்பத்தியை எட்டியது. இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூன் 24ம் தேதி முதல் அணு உலை ஆய்வுக்காக நிறுத்தப்பட்டது.
மீண்டும் இரண்டு மாதங்களில் மின் உற்பத்தியை தொடங்க திட்டமிடப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் அது தள்ளி போய் வருகிறது. கூடங்குளம் அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு 6 மாதங்கள் ஆகின்றன.

இந்நிலையில் கூடங்குளம் அணு மின் நிலைய வாளக இயக்குனர் சுந்தர் கூறுகையில், முதல் அணு உலையில் எரிபொருள்கள் நிரப்பும் பணிகள் நிறைவு பெற்று விட்டன. பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு அதில் உயர் வெப்ப சோதனை நடத்தப்பட உள்ளது.
மீண்டும் மின் உற்பத்தி தொடங்குவற்கு முன் அங்கு வால்வுகள் சரியாக இருக்கிறதா, நீராவி வெளியேற்றம் முறையாக நடக்கிறதா என சோதனை செய்ய வேண்டியுள்ளது. இந்த சோதனையின் போது சத்தம் அதிகம் வெளியேறும் என்பதால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. இன்று முதல் அப்பணி தொடங்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications