ஜிஎஸ்டியால் ஜவுளித் துறை முடங்கியது... ஈவிகேஎஸ் இளங்கோவன் காட்டம்
மத்திய அரசின் ஜிஎஸ்டி விதிப்பால் விசைத்தறி, ஜவுளித் துறை கடுமையாக பாதிக்கப்பட்டு அந்த தொழில்களே முடங்கிய நிலையில் உள்ளன என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்தார்.
ஈரோடு: ஜிஎஸ்டி அமல்படுத்தியதால் ஜவுளித் துறை முடங்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்தார்.
நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு என்ற நோக்கத்துடன் ஜிஎஸ்டி என்ற வரி விதிப்பு கடந்த ஜூலை மாதம் 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. வரி விதிப்பின்றி இயங்கி வந்த ஜவுளித் துறைக்கு ஜிஎஸ்டி விதிக்கப்பட்டதால் பெருமளவில் பாதிப்பை சந்திக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கைத்தறி துணிகளுக்கு ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பருத்தி நூல், அனைத்து நூல்களுக்கும் 5 சதவீதமும், ஆயத்த ஆடைகளில் ரூ.1000-க்கு மேற் உள்ள ஆடைகளுக்கு 12 சதவீதமும், ரேயான், பாலிஸ்டர் நூல் ரகங்களுக்கு 18 சதவீதமும், மற்ற துணி ரகங்களுக்கு 5 சதவீதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இதை திரும்ப பெற வலியுறுத்தி ஜவுளித் துறையினர் போராட்டம் நடத்தினர். எனினும் மத்திய அரசு செவி சாய்க்கவில்லை. இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவிக்கையில், மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி விதிப்பால் விசைத்தறியும், ஜவுளித் துறையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் அந்த துறையே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொலை, கொள்ளை, பலாத்காரம் அதிகரித்துள்ளது. ஆனால் முதல்வரோ தமிழகம் அமைதிப்பூங்காவாக உள்ளதாக தெரிவித்துள்ளது முரண்பாடான கருத்தாகும் என்றார்.












Click it and Unblock the Notifications