சிறுநீரக கோளாறு... தானாக வந்து அரசு மருத்துவமனையில் அட்மிட் ஆன தா.பாண்டியன்
சென்னை: மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் தா.பாண்டியன் சிறுநீரக கோளாறு காரணமாக சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவராகவே மருத்துவமனைக்கு வந்து டாக்டர்களைப் பார்த்து பின்னர் மருத்துவமனையில் அட்மிட் ஆகியுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக இருந்து வந்தார் தா.பாண்டியன். சமீபத்தில் அப்பதவியிலிருந்து ஓய்வு பெற்றார். இந்த நிலையில், நேற்று சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு வந்தார் தா.பாண்டியன். டாக்டர்களைப் பார்த்த அவர், தனக்கு சிறுநீரக பிரச்சினை இருப்பதாக கூறினார். இதையடுத்து டாக்டர்கள் அவருக்குப் பரிசோதனைகளை செய்தனர். அதன் பின்னர் உடனடியாக அட்மிட் ஆகுமாறு டாக்டர்கள் அறிவுறுத்தினர்.
இதையடுத்து 215வது வார்டில் தா.பாண்டியன் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உடல் நலம் தேறும் வரை தா.பாண்டியன் மருத்துவமனையில் இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications