சென்னை: விலைவாசி உயர்வு மறியல்… தா.பாண்டியன் உள்பட 500 பேர் கைது!
Subscribe to Oneindia Tamil

விலைவாசி உயர்வு, பண வீக்கம் மற்றும் மத்திய அரசின் பொருளாதார கொள்கையை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் இன்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது
சென்னை அண்ணா சாலையில் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த மறியலில் ஈடுபட்ட தா.பாண்டியன் உள்பட 500 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலும், திருவாரூர், திருச்சி அரவக்குறிச்சி, உடுமலை, விழுப்புரம் உள்ளிட்ட இடங்களில் மறியலில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.












Click it and Unblock the Notifications