சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறைக்கு போவார்- 'தைரிய பாண்டி' ஆன தா.பாண்டியன்
தென்காசி: சொத்துக் குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதா சிறைக்குப் போவது உறுதி என்று தா.பாண்டியன் அதிரடியாக கூறியுள்ளார்.
ஜெயலலிதாவுக்கு மிக நெருக்கமாக இருந்த 'தோழர்' தா.பாண்டியன்தான். ஜெயலலிதா எவ்வளவுதான் அவமானப்படுத்தினாலும் பொறுத்துக் கொண்டு மகா பொறுமையாக இருந்தவர் தா.பா.
ஆனால் அவருக்கே லோக்சபா தேர்தலில் பெரும் ஆப்பு வைத்து விட்டார் ஜெயலலிதா. இதனால் போகுமிடம் எல்லாம் ஜெயலலிதாவை விமர்சித்து வருகிறார் தா.பா.
தென்காசி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரை ஆதரித்துப் பிரசாரம் செய்து அவர் பாவூர்சத்திரத்தில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது..

கம்யூனிஸ்ட்கள் வெல்வார்கள்
பிரசாரம் செய்தபோது, ''நாடாளுமன்ற தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்று இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக வரும்.

தமிழகத்தில் சந்தர்ப்பவாத கூட்டணி
தமிழகத்தில் தற்போது ஒரு சந்தர்ப்பவாத கூட்டணியை அனைத்து கட்சிகளும் அமைத்துள்ளன.

ஜெயலலிதாவுக்கு ரொம்பப் பேராசை
தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு அதிகமான பேராசை உள்ளது. 40 தொகுதிகளில் போட்டியிடும் ஜெயலலிதா எப்படி பிரதமராக வர முடியும்?

இனி அவருக்கு இறங்குமுகம்தான்
தமிழகத்தில் ஜெயலலிதாவிற்கு இனி இறங்கு முகம்தான்.

ஜெயிலுக்குப் போவார்...
கர்நாடகாவில் நடக்கும் சொத்து குவிப்பு வழக்கின் முடிவில் சிறைச்சாலைக்குதான் செல்வார். நாடாளுமன்றத்திற்கு செல்ல முடியாது.

நாற்பதிலும் அதிமுக தோற்கும்
தமிழகம், புதுச்சேரி உளஅளிட்ட நாற்பது தொகுதிகளிலும் அதிமுக தோற்கும்.

ஜாதிக் கட்சிகளுடன் சேர்ந்த கருணாநிதி
திமுக தலைவர் கருணாநிதி ஜாதி கட்சிகளுடன் கூட்டணி அமைத்து பெரியாரின் சமூக நீதியை நிலைநாட்ட துடிக்கிறார்.

கருணாநிதி சுயநலவாதி
இலங்கை தமிழர்களை படுகொலை செய்த சிங்கள அரசுக்கு துணைபோன காங்கிரஸ் அரசுக்கு பல்லக்கு தூக்கிய கருணாநிதி, தற்போது இலங்கை தமிழர்களுக்காக நீலி கண்ணீர் வடிக்கிறார். அவர் ஒரு சுயநல வாதி.

வைகோ எப்படி பாஜகவுடன் சேரலாம்
இலங்கை தமிழர்களுக்கு தொடர்ந்து குரல் கொடுக்கும் வைகோ பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்கலாமா?

இவரெல்லாம் பிரதமர் பதவிக்குத் தகுதியானவரா...
9 முறை தேர்தலில் போட்டியிட்டுள்ள மோடி, இப்போது திருமணமானதை ஒப்புக்கொண்டுள்ளார். உண்மையை மறைத்த மோடி பிரதமர் பதவிக்கு தகுதியானவரா?.

ராமதாஸுக்கு மகன்தான் முக்கியம்
ராமதாசின் குறிக்கோள் தனது மகனை அமைச்சராக்க வேண்டும். மக்கள் பிரச்னைகளை முன்னிறுத்தி அவர் போராடமாட்டார்.

விஜயகாந்த் காணாமல் போய் விடுவார்
கொள்கை இல்லாத விஜயகாந்த் இந்த தேர்தலில் காணாமல் போவார என்றார் தா.பாண்டியன்

சாப மழை பொழிந்த தா.பா.
தா.பாவின் பேச்சு முழுவதும் கிட்டத்தட்ட சாபம் போலவே அனல் பறக்க இருந்ததால் பேச்சைக் கேட்ட தோழர்கள் குஷியாகி விட்டனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications