கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்த தா.பாண்டியன், முத்தரசன்
வயது முதிர்வினால் ஓய்வெடுத்து வரும் திமுக தலைவர் கருணாநிதியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன், மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.
சென்னை: கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் இல்லத்துக்கு இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தா.பாண்டியன் மற்றும் முத்தரசன் ஆகியோர் சென்றனர். ஓய்வெடுத்து வரும் கருணாநிதியை சந்தித்து இருவரும் நலம் விசாரித்தனர்.
வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக திமுக தலைவர் கருணாநிதி பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில்லை. கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக ஓய்வில் உள்ள கருணாநிதி திடீரென்று கடந்த வாரம் மீண்டும் மருத்துவமனைக்கு சென்றார். செயற்கை உணவுக்குழாய் மாற்றப்பட்டு சில மணி நேரங்களில் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார்.
#JUSTIN
— News7 Tamil (@news7tamil) August 28, 2017
கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் மு.கருணாநிதியுடன் தா.பாண்டியன், ஜி,முத்தரசன் திடீர் சந்திப்பு!#Karunanidhi pic.twitter.com/4KfN3UL8hc
நீண்ட நாட்களுக்குப் பிறகு கருணாநிதியை ஊடகம் வழியாகவும், நேரிலும் பார்த்த தொண்டர்கள் மகிழ்ச்சியடைந்தனர். ஓய்வில் இருக்கும் அவரை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் நேரில் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர்.
சமீபத்தில் அவரை விசிக தலைவர் திருமாவளவன், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
இந்த நிலையில், கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்துக்குச் சென்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தா.பாண்டியன் மற்றும் மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். இந்த சந்திப்பின்போது மு.க.ஸ்டாலின் மற்றும் துரைமுருகன் ஆகியோர் உடனிருந்தனர்.
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications