முருகன் கோயில்களில் இன்று தை பூசம் திருவிழா.. பழனி, திருச்செந்தூரில் பக்தர்கள் குவிந்தனர்
பழனி: தைப்பூச திருவிழாவையொட்டி பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து வந்து நேர்த்தி கடனை செலுத்தி வருகின்றனர்.
ஆண்டு தோறும் தை மாதத்தில் பூச நட்சத்திரத்தில் நடைபெறும் தைப்பூச திருவிழா பழனி கோவிலில் மிகவும் விமர்சையாக நடைபெறுவது வழக்கம். பழனியில் இன்று தைப்பூச திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுவதற்கான ஆயத்தப் பணிகள் பல நாட்களாக நடைபெற்று வந்தன. தை பூச விழாவில் கலந்து கொள்ள தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாகவும், காவடிகளை சுமந்தபடியும் கோயிலுக்கு வருகை புரிந்து குவிந்துள்ளனர். பக்தர்களின் கூட்டத்தால் சாமி தரிசனம் செய்ய 5 மணி நேரம் வரை வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதே போல் திருச்செந்தூர் சுப்பிரமணி சுவாமி கோயிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டது. 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், 4 மணிக் அபிசேகமும், நடைபெற்றது.
இந்த திருவிழாவில் கலந்து கொள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்துள்ளனர். பல நூறு கிலோ மீட்டர் தொலைவில் இருந்து திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு பாதயாத்திரையாகவும் பக்தர்கள் வந்துள்ளனர்.
உச்சிகால பூஜைக்கு பின்னர் கந்த பெருமானுக்கு தைப்பூச மண்டபத்தில் அபிசேகமும், அதனை தொடர்ந்து தீப ஆராதனையும் நடைபெறும் என்று திருச்செந்தூர் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications