பொதுக் குழு தீர்மான நகலை கொடுக்கும் போதே ஓபிஎஸ்சை தாண்டி ஓவர் சீன் போட்ட தம்பிதுரை
பொதுச் செயலாளராக சசிகலா பொறுப்பேற்க வேண்டும் என்ற தீர்மான நகலை சசிகலாவிடம் ஓ. பன்னீர் செல்வம் கொடுக்கும் போதே அருகில் இருந்த தம்பிதுரை ஓவரா சீன் போட்டார்.
சென்னை: சசிகலா விரைவில் தமிழகத்தின் முதல்வர் பதவியை ஏற்க வேண்டும் என்று தம்பிதுரை கூறியுள்ளார். பொதுச் செயலாளராக சசிகலா பொறுப்பேற்க வேண்டும் என்ற தீர்மான நகலை கொண்டு வந்து போயஸ் தோட்டத்தில் இருந்த சசிகலாவிடம் கொடுக்கும் போது, முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தைத் தாண்டி ஓவரா பவ்யம் காட்டினார் தம்பிதுரை.
கடந்த 5ம் தேதி ஜெயலலிதா மறைந்த பிறகு முதன்முறையாக 29ம் தேதி அதிமுகவின் பொதுக் குழு வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில் கூடியது. இந்தக் கூட்டத்தில் அதிமுகவின் பொதுச் செயலாளராக ஜெயலலிதாவின் தோழி சசிகலா பொறுப்பேற்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அந்தத் தீர்மானத்தை எடுத்துக் கொண்டு வானகரத்தில் இருந்து போயஸ் கார்டனுக்கு பறந்தது முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தலைமையிலான 5 பேர் கொண்ட குழு. அதில் நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரையும் ஒருவர். கார் நேராக போயஸ் கார்டனை அடைந்ததும், பச்சைப் புடவையில் தயாராக இருந்த சசிகலாவை 5 குழு சந்தித்தது.
தீர்மான நகலை முதலில் சசிகலாவிடம் வழங்கிய ஓ. பன்னீர்செல்வம் பவ்யமான குனிந்து அவரது காதருகில் "தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம். நகலை கொண்டு வந்திருக்கிறோம். நீங்கள் பொறுப்பை ஏற்க வேண்டும்" என்று மெதுவாக கூறினார்.
அப்போது அருகில் இருந்த தம்பிதுரை ஓ. பன்னீர்செல்வத்தை விட கூடுதலாக குனிந்து கொஞ்சம் சத்தமாக, பய பக்தியுடன், "சின்னம்மா, நீங்கள்தான் அம்மா வழியில் நின்று கட்சிப் பணியை செய்து எங்களை வழி நடத்த வேண்டும்" கெஞ்சினார். அப்போது அழுது கொண்டே இருந்த சசிகலா மிக லேசாக தலையசைத்தார்.
அந்த ஓவர் சீனில் ஓ. பன்னீர்செல்வம் மட்டுமல்ல, அங்கிருந்த பலரும் அசந்து போனார்கள். அதன் தொடர்ச்சியாக தற்போது, சசிகலாதான் முதல்வராக பதவி ஏற்க வேண்டும் என்று தம்பிதுரை அறிக்கை வெளியிட்டுள்ளார். இதன் மூலம் பன்னீர்செல்வத்தை ஓரம் கட்டும் முயற்சியில் இறங்கியுள்ளார் தம்பிதுரை.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications