ஆசியாவிலேயே நம்பர் 1 சந்தர்ப்பவாதி நிதிஷ் குமார் தான்! பதவி பித்தர்! வறுத்தெடுத்த தமிமுன் அன்சாரி!
திருப்பூர்: ஆசிய கண்டத்திலேயே நிதிஷ்குமாரை போன்ற சந்தர்ப்பவாத அரசியல்வாதியை யாரும் பார்க்க முடியாது என மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி விமர்சித்துள்ளார்.
பீகாரில் என்ன நடந்தது என்றே தெரியவில்லை எனக் கூறிய அவர், நிதிஷ்குமாரை பதவி பித்தர் என்றும் விமர்சித்துள்ளார். இந்தியா கூட்டணியில் நிதிஷ்குமார் மீது பெரும் நம்பிக்கை வைக்கப்பட்டிருந்த நிலையில் அந்தர்பல்டி அடித்து இந்தியா கூட்டணியிலிருந்து விலகி தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் மங்களத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட தமிமுன் அன்சாரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் நிதிஷ்குமார் பற்றி கூறியதாவது;
''VP சிங் அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட நிதிஷ்குமார், லாலு பிரசாத் யாதவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அவ்வப்போது கூட்டணிகளை மாற்றினார். இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் கூட்டணி மாறுவது சகஜமானது. ஆனால் நிதிஷ் குமாரின் அரசியல் போக்கு சந்தர்ப்பவாதம் நிறைந்தது.18 மாதங்களுக்கு முன்பு பாஜகவுடன் முரண்பாடு கொண்டு, ராஷ்டீரிய ஜனதா தளத்துடன் கூட்டணி கொண்டு மீண்டும் முதல்வர் ஆனார் நிதிஷ்.''
'' பாஜகவையும், ஃபாசிசத்தையும் வீழ்த்தப் போவதாக கூறி இந்தியா கூட்டணியை உருவாக்கியதால் நிதிஷ் மீது பெரும் எதிர்பார்ப்பு உருவானது. இடையே பீகாரில் என்ன நடந்தது எனத் தெரியவில்லை. இன்று லாலு, தேஜஸ்வி யாதவுடன் முரண்பட்டு மீண்டும் பாஜகவுடன் கூட்டணி வைத்து முதலமைச்சராக பதவியேற்றிருக்கிறார் நிதிஷ் குமார். இவரை போல் இப்படி ஒரு சுயநல - பதவி பித்தரை நாடு பார்த்ததில்லை. இந்தியாவில் மட்டுமல்ல. ஆசியா கண்டத்திலேயே நிதிஷ் குமார் போன்ற சந்தர்ப்பவாத அரசியில்வாதி யாருமில்லை. '' இவ்வாறு அவர் கடுமையாக சாடினார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications