ராஜிவ் வழக்கு: 7 பேரை விடுவிக்கும் தமிழக அரசின் முடிவை மத்திய அரசு ஆதிரிக்க வேண்டும்: பெ.மணியரசன்
சென்னை: ராஜிவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருக்கும் 7 பேரை விடுவிக்கும் தமிழக அரசின் முடிவை மத்திய அரசு ஆதரிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசிய பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
ராஜிவ் கொலை வழக்கில் ஏறத்தாழ 25 ஆண்டுகளாக சிறையில் வாடும் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, இராபர்ட் பயஸ், ஜெயக்குமார், இரவிச்சந்திரன் ஆகிய 7 தமிழர்கள், தாங்கள் 20 ஆண்டுகளைக் கடந்தும் நீண்ட காலம் சிறையில் வாடுவதைக் குறிப்பிட்டு, தங்களை விடுதலை செய்ய வேண்டுமென்று தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை மனு செய்திருந்தனர்.

இதனடிப்படையில், தமிழ்நாடு அரசு இந்த ஏழு தமிழர்களையும் விடுதலை செய்வது என முடிவு செய்து நடுவண் அரசின் உள்துறை அமைச்சகத்திற்குக் கருத்துக் கேட்டு இன்று, கடிதம் அனுப்பியிருக்கிறது. அண்மையில் வெளியான உச்ச நீதிமன்ற அரசியல் அமர்ப்பின் தீர்ப்பிற்கு ஏற்ப, இந்த கடிதத்தைத் தமிழ்நாடு அரசு அனுப்பியிருக்கிறது. இது வரவேற்கத்தக்கது.
ஏழு தமிழர் விடுதலை நோக்கிய முயற்சியில், முக்கியமான ஒருபடி முன்னேற்றமாகும். தமிழ்நாடு அரசின் முடிவை ஏற்று, இந்திய அரசு இந்த ஏழு தமிழர்களின் விடுதலைக்கு ஒத்துழைப்பதற்கு முடிவு செய்து உடனே அறிவிக்க வேண்டும் என இந்திய அரசை தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் மணியரசன் கூறியுள்ளார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications