அட நாராயணா.. ஸ்டாலினுக்கு இது பெரிய சவால்தான்.. சமாளிப்பாரா!
ஸ்டாலினுக்கு தமிழிசை ட்விட்டரில் சவால் விடுத்துள்ளார்.
Recommended Video

சென்னை: சோபியா விவகாரம் தொடர்பாக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஸ்டாலினுக்கு சவால் விடுத்துள்ளார்.
சம்பந்தப்பட்ட மாணவி சோபியாவே இப்போ ஆளை காணோம். ஆனா தமிழிசை இந்த விவகாரத்தை இன்னும் விடற மாதிரி தெரியல.

சோபியா விடுதலை
தூத்துக்குடிக்கு விமானத்தில் தமிழிசைக்கு எதிராக சோபியா என்ற மாணவி பாசிச பாஜக ஆட்சி ஒழிக என முழக்கமிட்டு, பின்பு அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழிசை புகார் அளிக்கப்பட்டு, அந்த புகாரின் பேரில் சோபியா கைது செய்யப்பட்டு, 15 நாள் என தண்டனை வழங்கப்பட்டு, பின்பு சோபியாவுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிடப்பட்டு...ஒருவழியாக அந்த கேஸ் முடிந்தது.

தமிழிசையின் பதிலடி
ஆனால், இந்த பிரச்சனையில் திமுக தலைவர் ஸ்டாலின் சோபியாவுக்கு ஆதரவாக குரல் கொடுக்கவும்தான் இந்த விவகாரம் இன்னும் பத்திக் கொண்டது. அதனால் தலைவர்கள் ஒவ்வொருவராக பாஜகவுக்கு எதிராகவும், சோவியாவுக்கு ஆதரவாகவும் கண்டனங்களை பதிவு செய்தனர். எல்லா கண்டனங்களையும் விட அதிகமாக பேசப்பட்டது ஸ்டாலினுடையதுதான். அதனால்தான் தமிழிசைக்கு கோபம் அதிகரித்து, பதில் கண்டனத்தையும் தெரிவித்தார்.
|
நாராயணனின் ட்விட்டர்
இந்நிலையில், பாஜக.,வை சேர்ந்த நாராயணன் திருப்பதி தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்டாலினுக்கு எதிராக ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார். அதில், "ஸ்டாலினுக்கு துணிவிருந்தால்'பாசிச பாஜக அரசு ஒழிக' என்று,பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் லண்டனுக்கு செல்லும் போது கோஷமிடுவாரா என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
|
தமிழிசை சவால்
நாராயணனின் இந்த பதிவிற்கு தமிழிசை சவுந்தராஜன் பதில் கருத்து ஒன்றை தனது ட்விட்டரில் போட்டுள்ளார். அதில், "சபாஷ் சரியான கேள்வி! தெம்பு திராணியிருந்தால்????பேச்சுரிமை காட்டட்டுமே?" என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சவால் விடுத்துள்ளார்.
ஸ்டாலின் மீதான கோபமும், வருத்தமும் தமிழிசைக்கு இன்னும் போகவில்லை போலும்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications