"வார்த்தைய" விட்ட தங்கம்.. கொந்தளித்த கோட்டை.. உடனே வருத்தம் தெரிவித்தார் தமிழக நிதியமைச்சர்.. ஏன்?
சென்னை: தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு திடீரென மன்னிப்பு கேட்டுள்ளார்.. இதுகுறித்து ட்வீட் ஒன்றையும் பதிவிட்டிருக்கிறார்.. என்ன நடந்தது?
ஆளுநர் திருப்பி அனுப்பியிருந்த 10 மசோதாக்களை மறுபடியும், சட்டசபையில் நிறைவேற்றுவது குறித்த, சிறப்புக்கூட்டம் கடந்த 18ம் தேதி நடைபெற்றது.. அனைத்து கட்சிகளுமே இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதில், பாஜக தன்னுடைய கருத்தை பதிவு செய்துவிட்டு, வெளிநடப்பு செய்தது..

அதுபோலவே, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேரவையில் பேசியபோது, "ஆளுநர் தொடர்பாக சுப்ரீம்கோர்ட்டில் கேஸ் உள்ளபோது, பேரவையில் எதுக்காக மறுபடியும் மசோதாக்களை நிறைவேற்றி அனுப்ப வேண்டும்? என்று கேள்வி எழுப்பினார். இருந்தாலும், 10 மசோதாக்களில் 9 மசோதாவை ஏற்று பேசினார். ஆனால், மீன்வள பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றுவதாக கூறிய, அந்த மசோதாவுக்கு மட்டும் எதிர்ப்பு தெரிவித்தார். இதன் காரணமாக வெளிநடப்பு செய்வதாகவும் அறிவித்து விட்டுப்போனார்.
கிண்டல் துரைமுருகன்: ஆக மொத்தம், காரணங்கள் வேறு வேறாக இருந்தாலும், பாஜகவும் வெளிநடப்பு செய்தது, அதிமுகவும் வெளிநடப்பு செய்தது. தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு முன்பேயே இந்த வெளிநடப்புகள் அடுத்தடுத்து நடந்தன.. இதைத்தான், பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது என்று, மூத்த தலைவர் துரைமுருகனும் கிண்டலாக விமர்சித்திருந்தார்.
இதற்கு பிறகு, நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்து பேட்டி ஒன்றை தந்திருந்தார். அப்போது, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் வெளிநடப்பை கடுமையாக விமர்சித்தார்.
"அவையில் தன்னுடைய கருத்துக்களை எடுத்து வைத்து விட்டு, வெளிநடப்பு செய்வதற்காக வேண்டுமென்றே, ஒரு காரணத்தை வலிந்து தேடி, ஆங்கிலத்தில் Lame Excuse என்று சொல்வார்கள்.. ஒரு "நொண்டிச் சாக்கினை" கண்டுபிடித்து சொல்லி, அவரும் அதிமுக உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்திருக்கிறார்கள். நொண்டி சாக்கு சொல்லி கூட்டத்தொடரிலிருந்து வெளிநடப்பு வெய்வதையே வாடிக்கையாக கொண்டிருக்கிறார்கள்.
எடப்பாடி பழனிசாமி: ஜெயலலிதா பெயரில் அமைக்கப்பட்டு இருக்கும் தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்திற்கு அந்த பெயர் இல்லாமலேயே இந்த சட்ட முன்வடிவு இங்கு கொண்டு வரப்படுகிறது.. அதனால், நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம் என்று ஒரு காரணத்தைச் சொல்லி விட்டு போயிருக்கிறார் சென்றார்" என்று தங்கம் தென்னரசு கூறியிருந்தார்.
நிதியமைச்சரின் இந்த பேச்சுக்கு மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பலரும் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தனர். மாற்றுத்திறனாளிகளின், குடும்ப தலைவியருக்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகையை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்றைய தினம் மாற்றுத்திறனாளிகள் தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தனர்.
தலைவர் பேட்டி: அந்தவகையில், சென்னை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் தலைவர் ஜான்சிராணி தலைமை வகித்தார். சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடேவிடம் கோரிக்கை மனுவையும் அளித்தார்.
பிறகு சங்கத்தின் தலைவர் ஜான்சி ராணி செய்தியாளர்களிடம் பேசியபோது, "கடந்த, 18ம் தேதி நடந்த, தமிழக சட்டசபை சிறப்பு கூட்டத் தொடரின்போது, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி அளித்தார். அப்போது, அதிமுகவினர் ஏதாவது ஒரு, 'நொண்டி சாக்கு' கூறி கூட்டத்தொடரில் இருந்து வெளிநடப்பு செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர் என்று பேசியுள்ளார்.
மாற்று திறனாளிகள்: அரசியல் ரீதியான, ஆரோக்கியமான விமர்சனங்களை சொல்ல பல வார்த்தைகள் இருக்க, ஊனத்தை குறிப்பிட்டு நையாண்டி செய்து விமர்சிப்பது ஏற்க முடியாதது. இதில், முதலமைச்சர் ஸ்டாலின், உடனடியாக தலையிட்டு, அமைச்சரின் தவறை சுட்டிக் காட்ட வேண்டும். நிதியமைச்சரும் மாற்றுத் திறனாளிகளிடம் மன்னிப்பு கோர வேண்டும்" என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், "நொண்டி சாக்கு" என்ற தன்னுடைய பேச்சுக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வருத்தம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தன்னுடைய ட்விட்டர் பதிவில், "கடந்த 18-11-23 அன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது, எனது பேச்சின் ஊடே நான் பயன்படுத்திய வார்த்தை மாற்றுத் திறனாளி நண்பர்களின் மனதைப் புண்படுத்தியுள்ளதாக அறிந்து மிகவும் வருந்துகிறேன்.
வருத்தம்: மாற்றுத் திறனாளிகள் மீது அன்பும், அக்கறையும், மதிப்பும் எப்போதும் உடையவன் என்ற வகையில், எவ்வித உள் நோக்கமுமின்றி பேட்டியின் ஊடே வெளிப்பட்டதொரு சொல் எனினும், மனம் புண்பட்டிருக்கும் அவர்களது உணர்வினை முழுமையாகப் புரிந்து கொள்கிறேன். எனது மனமார்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications