ஜெ.வை நேரில் சந்தித்து நன்றி சொன்ன தங்கத் தமிழ் செல்வன்
சென்னை: அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதாவை, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள புதுச்சேரி மாநில கழக தேர்தல் பிரிவுச் செயலாளர் பி.கண்ணன், தென்சென்னை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர், தேனி மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவைச் செயலாளர் தங்கத் தமிழ் செல்வன் ஆகியோர் தனித்தனியே நேரில் சந்தித்து ஆசி பெற்றனர்.
தேனி மாவட்டத்தைப் பொறுத்தவரை அதிமுகவில் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், ஆண்டிப்பட்டி எம்எல்ஏவான தங்கத் தமிழ்ச் செல்வனுக்கும் இடையில் தொடர்ந்து பனிப்போர் நிலவி வருகிறது. தற்போது ஓ.பன்னீர்செல்வத்தின் செயல்பாடுகள் அதிமுகவில் குறைந்துள்ள நிலையில், தங்க தமிழ்ச்செல்வனின் செல்வாக்கு மீண்டும் உயர்ந்து வருகிறது.

சில தினங்களுக்கு முன்னர் தங்க தமிழ்ச்செல்வன் எம்எல்ஏவுக்கு புதிய பதவி அளித்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். தேனி மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளராக தங்க தமிழ்ச் செல்வன் எம்எல்ஏ நியமனம் செய்யப்பட்டார். அதேபோல தேனி மாவட்ட எம்ஜிஆர் அணி செயலாளராக எம்.ராஜ்குமாரும், தேனி மாவட்ட மாணவர் அணி செயலாளராக எம்.செல்வமும் நியமிக்கப்பட்டனர்.

தேனி மாவட்ட இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மாவட்ட இணைச் செயலாளராக எம்.மணியும், ஆண்டிப்பட்டி ஒன்றிய கழக மாவட்ட பிரதிநிதியாக டி.ஆர்.என். வரதராஜனும் நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது தேனி மாவட்டத்தில் நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகளில் சிலர் தங்க தமிழ்ச் செல்வனின் ஆதரவாளர்கள் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட நிர்வாகிகள் இன்று ஜெயலலிதாவை நேரில் சந்தித்தனர். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள புதுச்சேரி மாநில கழக தேர்தல் பிரிவுச் செயலாளர் பி. கண்ணன்; தென்சென்னை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு. விருகை வி.என். ரவி; தேனி மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவைச் செயலாளர் தங்க தமிழ்செல்வன், எம்.எல்.ஏ, மற்றும் கேரள மாநிலக் கழகச் செயலாளர் திரு. ஏ.எல். பிரதீப் ஆகியோர் தனித் தனியே நேரில் சந்தித்து ஆசி பெற்றனர்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications