ஜல்லிக்கட்டு முதல் மெர்சல் வரை.. தமிழகத்தில் தடம் புரண்ட பாஜக
சென்னை: தமிழகத்தில் பாஜக தவறுக்கு மேல் தவறுகளை செய்து மக்களிடம் கெட்ட பெயரை சம்பாதித்து வருகிறது.
பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழக பாக தலைவர்களான, தமிழிசை, பொன்.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், எச்.ராஜா போன்றோருக்கு டிவி மீடியாக்களில் அதிக முக்கியத்துவம் கிடைத்தது.
ஆட்சி அதிகாரமும், பப்ளிசிட்டி மோகமும், இத்தலைவர்கள் கண்களை மறைத்துவிட்டது. ஒருசில விஷயங்களை தவிர்த்து பார்த்தால் பெரும்பாலான விஷயங்களில் பாஜக தலைவர்கள், தமிழகத்தின் ஒட்டுமொத்த எண்ணத்திற்கும் மாறாகவே பேசி வருகிறார்கள்.

எச்.ராஜாவின் விஷமம்
இதே, இப்போது மெர்சல் விவகாரத்திலும், பெரும் எதிர்ப்பை சம்பாதித்துவிட்டனர். தப்பான புள்ளி விவரங்களோடு படம் வெளியாகியுள்ளது, அதை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு பாஜக தலைவர்கள் நின்றிருந்தால், அது ஜனநாயக மாண்பாக மதிக்கப்பட்டிருக்கும். ஒரு சிலரின் எதிர்ப்போடு பிரச்சினை முடிந்திருக்கும். ஆனால், விஜய் மதத்தை மறைத்து, பொய் கருத்துக்களை பரப்புவதாக எச்.ராஜா கூறியதும், விஜய் வாக்காளர் அடையாள அட்டையை வெளியிட்டதும், அக்கட்சியினரை மேலும், மேலும் தமிழக மக்களிடமிருந்து அன்னியப்பட வைத்துள்ளது.

தேச விரோத சக்திகள்
ஜல்லிக்கட்டு விவகாரத்தை உடனடியாக சரி செய்திருக்க முடிந்தும், அதை அப்படியே எரியவிட்டு பிறகுதான் அணைத்தனர் மத்திய, மாநில அரசுகள். ஜல்லிக்கட்டுக்காக போராடியவர்களுடன் தேச விரோத சக்திகள் சேர்ந்துவிட்டதாக பாஜக தலைவர்கள் கூறியதும், அதையடுத்து போலீசார் தடியடி நடத்தியதும் பாஜகவுக்கு மற்றொரு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

நீட் பல்டி
நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டத்தை மக்கள் எதிர்ப்பது தெரிந்தும், அதை வாபஸ் பெறாமல், இழுத்தடித்து கெட்ட பெயரை சம்பாதித்த பாஜக அரசு நீட் விவகாரத்தில் திடீரென பல்டியடித்து மாபெரும் தவறை இழைத்தது. இதனால் நீட் தேர்வில் விலக்கு கிடைக்கும் என நம்பியிருந்த மாணவி அனிதா, தற்கொலை செய்து உயிரை மாய்த்தார். தமிழகமே அதிர்ந்து போனது. நீட் தேர்வுக்கு முதலில் இருந்தே முட்டுக்கொடுத்து மக்களிடம் அன்னியப்பட்டனர் தமிழக பாஜகவினர்.

எச்.ராஜாவின் விஷமம்
இதே, இப்போது மெர்சல் விவகாரத்திலும், பெரும் எதிர்ப்பை சம்பாதித்துவிட்டனர். தப்பான புள்ளி விவரங்களோடு படம் வெளியாகியுள்ளது, அதை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு பாஜக தலைவர்கள் நின்றிருந்தால், அது ஜனநாயக மாண்பாக மதிக்கப்பட்டிருக்கும். ஒரு சிலரின் எதிர்ப்போடு பிரச்சினை முடிந்திருக்கும். ஆனால், விஜய் மதத்தை மறைத்து, பொய் கருத்துக்களை பரப்புவதாக எச்.ராஜா கூறியதும், விஜய் வாக்காளர் அடையாள அட்டையை வெளியிட்டதும், அக்கட்சியினரை மேலும், மேலும் தமிழக மக்களிடமிருந்து அன்னியப்பட வைத்துள்ளது.

தேசிய கட்சிகளின் தலையெழுத்து
"தமிழக பாஜக தலைவர்கள் தமிழக மக்களுக்காக பேட்டிகள் கொடுக்கவில்லை, டெல்லியிலுள்ள தலைமையின் கவனத்தை பெறவே இப்படி செய்கிறார்கள். எனவே மக்களிடம் அவர்கள் அன்னியப்படுகிறார்கள்" என்கிறார் ஒரு அரசியல் விமர்சகர். தேசிய கட்சிகளின் பெரும் தலைவலி இதுதான். ராஜிவ் கொலை வழக்கில் காங்கிரஸும் தமிழகத்தின் பெரும்பான்மை மக்கள் சிந்தனைகளுக்கு எதிராகத்தான் பேச வேண்டியுள்ளது. ஆனால், பாஜக தலைவலியை தானே ஏற்படுத்தி, சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்வதில்தான் வித்தியாசம் உள்ளது.
-
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட்












Click it and Unblock the Notifications