குப்பையில் இருந்து குப்பென்று வந்த வாடை.. கருகிய சடலம்.. அதிர்ந்த மக்கள்.. ஜோலார்பேட்டையில் பரபரப்பு
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியம் காவேரி பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட நேதாஜி நகர் பகுதியில் ஆற்றுப்பாலம் அருகே அடையாளம் தெரியாத பெண் எரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பக்கத்தில் இருந்த புடவை துண்டுகளை வைத்து பெண் எரிக்கப்பட்டு இருப்பதை அக்கம் பக்கத்தினர் உறுதி செய்து காவல்துறைக்கு தகவல் அளித்தனர். அந்த உடலை கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்-
நான்கு வழி சாலை ஜோலார்பேட்டை வரை செல்லும் சாலைக்கு இடையில் உள்ள நேதாஜி நகர் பகுதியில் ஆற்றுப் பாலம் அமைந்துள்ளது.

மக்கள் கவனித்தனர்
வழக்கமாக அவ்விடத்தில் குப்பைகளை கொட்டி எரித்து விடுவது வழக்கம். வழக்கம்போல இவ்வழியாக சென்ற ஊர் பொதுமக்கள் ஏதோ எரிந்து கொண்டிருக்கிறது என்று குப்பைகளை கொட்டி சென்றிருக்கிறார்கள்.

பெண் உடல்
ஆனால் ஒரு சிலர் வாடையில் சந்தேகம் அடைந்து எட்டிப் பார்த்ததில் சடலம் எரிந்து கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்பு தகவல் அறிந்து விரைந்து வந்த காவிரி பட்டு கிராம நிர்வாக அலுவலர் மேகலா காவல்துறைக்கு தகவல் சொல்லியுள்ளார்.

பெண் கொலை
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எரிந்து சாம்பலான நிலையில் இருந்த பிரேதத்தின் பக்கத்தில் இருந்த புடவை துண்டுகளை வைத்து இறந்து போனவர் பெண் என தீர்மானித்து பின்பு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகிறார்..

கொலைக்கான காரணம்
அடையாளம் தெரியாத பெண் எரித்துக் கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் ஜோலார்பேட்டை பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. வேறு பகுதியில் கொன்று உடலை இங்கு எரிந்தார்களா, எரிக்கப்பட்டவர் யார்? என்ன பிரச்சனை என்ற கோணத்தில் விசாரித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications