எம்ஜிஆர் நினைவிடத்தை "எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா" நினைவிடமாக பெயர் மாற்ற தமிழக அரசு முடிவு

மறைந்த ஜெயலலிதா திருவுருவப் படத்தை சட்டசபையில் வைக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: எம்.ஜி.ஆர். நினைவிட பெயரை மாற்றம் செய்ய தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மறைந்த ஜெயலலிதா திருவுருப் படத்தை சட்டசபையில் வைக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு முதலமைச்சர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். அப்போது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் சில முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

The cabinet has decided to set aside Rs 15 crore to be spent on a memorial for J Jayalalithaa

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா எதிர்பாராதவிதமாக 5.12.2016 அன்று இயற்கை எய்தியது குறித்து, தமிழகஅமைச்சரவை அதிர்ச்சியும் ஆற்றொணாத் துயரமும் கொள்கிறது. அன்னாரது மறைவால் அவரைப் பிரிந்து வாடும் இலட்சோபலட்சம் இரத்தத்தின் இரத்தமான கழக உடன்பிறப்புகளுக்கும், தமிழக மக்களுக்கும், உலகமெங்கும் வாழும் தமிழர்களுக்கும் தமிழ்நாடு அமைச்சரவை தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.

நம் அனைவரின் நெஞ்சில் நிறைந்திருக்கும் முதலமைச்சர் ஜெயலலிதாவின் திருவுருவப்படத்தை தமிழக சட்டமன்றப் பேரவையில் வைப்பதற்கும், அவருக்கு பாரத ரத்னா விருது அளிப்பதற்கு மைய அரசுக்கு பரிந்துரைப்பதற்கும், அவருக்கு நாடாளுமன்ற வளாகத்தில் முழு திருவுருவ வெண்கல சிலை அமைப்பதற்கு மைய அரசிடம் கோருவதற்கும்,

அவர் நல்லடக்கம் செய்யப்பட்ட அதே இடத்தில் ரூபாய் பதினைந்து கோடியில் நினைவு மண்டபம் அமைப்பதற்கும், பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர். நினைவிடம் என்பதை 'பாரத ரத்னா டாக்டர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் புரட்சித்தலைவி அம்மா செல்வி ஜெ ஜெயலலிதா நினைவிடம்' என பெயர் மாற்றம் செய்யவும் அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இவ்வாறு அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+