அனல் பறக்கும் அரசியல் சூழல்.. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம்
தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று பிற்பகல் 3 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கூடுகிறது.
சென்னை: தமிழகத்தில் உச்சகட்ட பரபரப்பு நிலவி வரும் சூழலில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.
இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் கொடுத்ததாக கைது செய்யப்பட்ட டிடிவி தினகரன் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். அதிமுகவில் தொடர்ந்து பணியாற்றுவேன் என்றும் தன்னை நீக்கும் அதிகாரம் பொதுச் செயலாளருக்கே உண்டு என்றும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே டிடிவி தினகரனுக்கு வெற்றிவேல், தங்கதமிழ்ச்செல்வன், கதிர்காமம் உள்ளிட்ட 32 எம்எல்ஏ-க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் எடப்பாடி அரசு பெரும்பான்மை பலத்தை இழந்து கவிழ்ந்து விடும் என்று கருதப்படுகிறது. மேலும் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் 12 எம்.எல்.ஏக்கள் செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று பிற்பகல் 3 மணிக்கு சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் ஜி.எஸ்.டி. மசோதா, டாஸ்மாக் எதிர்ப்பு உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெறும் 5வது அமைச்சரவை கூட்டம் இதுவாகும். பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அமைச்சரவை கூட்டப்படுவதால் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.
மேலும் எம்.எல்.ஏக்கள் டிடிவி தினகரனை சந்தித்து ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் இந்த அமைச்சரவை கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications