6 வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தாக வேண்டும்: அமைச்சர் ஜெயக்குமார்
6 வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தாக வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்து இருக்கிறார்.
சென்னை: 6 வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தாக வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்து இருக்கிறார்.
காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் இறுதி தீர்ப்பை வழங்கியுள்ளது. அதன்படி காவிரி ஆற்றை உரிமை கொண்டாட எந்த மாநிலத்திற்கும் உரிமையில்லை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்திற்கு கர்நாடகா 177.25 டி.எம்.சி நீர் தர உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நடுவர் மன்றம் 192 டிஎம்சி வழங்க உத்தரவிட்ட நிலையில் அதனை சுப்ரீம் கோர்ட் குறைத்துள்ளது.
கர்நாடகத்துக்கு 280.75 டி.எம்.சி. நீர் வழங்க உத்தரவு. மேலும் 6 வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தாக வேண்டும் என்றும் கூறியுள்ளது.
ஆனால் கர்நாடகாவில் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் மத்திய பாஜக அரசு இதில் முடிவெடுக்காமல் இருக்கிறது. இரண்டு வாரத்திற்கு மேலாகியும் இதுவரை எந்தவிதமான அறிவிப்பும் இதில் வெளியாகவில்லை.
இது குறித்து தற்போது தலைமை செயலகத்தில் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்து இருக்கிறார்.
அதில் ''உச்சநீதிமன்ற உத்தரவின்படி 6 வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தாக வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பு என்பது நிறைவேற்றப்பட வேண்டிய ஒன்று'' என்றுள்ளார்.
மேலும் ''காவிரி விவகாரத்தில் மாநில அரசு உரிமையை விட்டுக்கொடுக்காது. காவிரி தீர்ப்பு தொடர்பாக மார்ச் 9-ம் தேதி டெல்லியில் 4 மாநிலங்கள் ஆலோசனை நடக்கிறது. தமிழக தலைமை செயலாளர், பொதுப்பணி செயலாளர் இதில் பங்கேற்பார்கள்'' என்றுள்ளார்.
-
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
பெங்களூருவுடன் ஒப்பிடுவது தவறு.. பரந்தூர் விமான நிலையம் குறித்து பூவுலகின் நண்பர்கள் கருத்து -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications