உலக புகழ்பெற்ற திருவாரூர் ஆழித்தேரோட்டம் கோலாகலம்.. திரளான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்
திருவாரூர் ஆழித்தேரோட்டம் இன்று வெகுவிமர்சியாக நடைபெற்றது.
திருவாரூர்: உலகப்புகழ் பெற்ற திருவாரூர் ஆழித்தேரோட்டம் இன்று வெகுவிமர்சியாக நடைபெற்றது. அமைச்சர் காமராஜ், மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ் உள்ளிட்டோர் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.
வரலாற்று சிறப்பு மிக்க கோயில் திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோயில் ஆகும். அதிலும் ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் ஆகும் திருவாரூர் தேர் ஆகும். இது 30 அடி அகலமும், 96 அடி உயரமும், 220 டன் எடையும் கொண்டது. அலைகடலென பக்தர்கள் திரண்டு தேர் இழுப்பதால் ஆழித்தேரோட்டம் எனப்படுவதாக கூறுவதுண்டு.

ஆழித்தேரோட்டத்தை முன்னிட்டு கடந்த 20ஆம் தேதியே மூலவர் தேருக்கு கொண்டுவரப்பட்டு அலங்காரப் பணிகள் நடைபெற்று வந்தன. அதனை தொடர்ந்து சுவாமிக்கு தினந்தோறும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வந்தன.
இந்நிலையில் இன்று காலை திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோயிலில் ஆழித்தேரோட்டம் கோலாகலமாக தொடங்கியது. இதில் அமைச்சர் காமராஜ், ஆட்சியர் நிர்மல்ராஜ் தேரை வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.
தேரோட்டத்தை முன்னிட்டு முன்னதாக திருவாரூரில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை இழுத்தனர். கீழ வீதியிலிருந்து புறப்பட்ட தேரானது முக்கிய வீதிகள் வழியாக சென்றதை பக்தர்கள் பக்தி பரவத்துடன் கண்டு களித்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications