இனி திமுகவை சும்மா விடக்கூடாது.. பாஜக பகீர் பிளான்!
Recommended Video

சென்னை: திமுகவுக்கு பாஜக மேலிடம் நெருக்கடி கொடுப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வரும் லோக்சபா தேர்தலுக்கு முன்பாக காங்கிரசை தனிமைப்படுத்த வேண்டும் என்பது பாஜக தலைமையின் அஜென்ட்டாவாக உள்ளதாம். இதற்காக எப்போதோ காய் நகர்த்த ஆரம்பித்துவிட்டனர்.
பல்வேறு ஆசை வாக்குறுதிகளை காட்டி ஆட்சிக்கு வந்த பாஜக இதுவரை அதில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றவில்லை.

சுவிஸ் வங்கி
வாக்குறுதிகளை நிறைவேற்றாதது மட்டுமின்றி, அதற்கு சமாதானம் சொல்லும் வகையில் ஏதேதோ காரணங்களை சொல்ல தொடங்கிவிட்டது. சுவிட்சர்லாந்து வங்கிகளில் பதுக்கப்பட்ட கருப்பு பணத்தை மீட்போம் என தேர்தலுக்கு முன்பாக கூறியது பாஜக. ஆனால், நிதி அமைச்சர் அருண் ஜேட்லி சில தினங்களுக்கு முன்பு, சுவிஸ் வங்கியில் இருப்பதெல்லாம் கருப்பு பணம் என்று சொல்லிவிட முடியாது என கூறினார். இது ஊழல் எதிர்ப்புக்காக பாஜகவை ஆதரித்தவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலை வாய்ப்பு
வேலை வாய்ப்பை பெருக்குவேன் என தேர்தலின்போது பிரசாரம் செய்த மோடியால், அவரது அரசு அமைந்த பிறகு அதை செய்ய முடியவில்லை. பக்கோடா விற்பனை செய்ய கடன் வசதி செய்து தருகிறோமே என மத்திய அரசில் உள்ளவர்கள் கேட்டதும், வேலை வாய்ப்பு குறித்த புள்ளி விவரங்களில்தான் பிரச்சினை என மோடியே கூறியதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக தனிப்பெரும்பான்மை
இந்த நிலையில்தான், வரும் லோக்சபா தேர்தலில் தனிப்பெரும்பான்மை இடங்களை பாஜக வெல்ல முடியாது என மத்திய உளவுத்துறை தகவல் அளித்துள்ளதாம். இந்த தொகுதிகள் காங்கிரசுக்கு செல்லும் வாய்ப்புள்ளதாகவும் உளவுத்துறை எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாம். எனவே தங்களது வெற்றியில் கவனம் செலுத்துவதைவிட காங்கிரஸ் கூட்டணியை பலவீனமாக்குவதில் பாஜக தலைமை இறங்கியுள்ளதாம்.

காங்கிரசுக்கு செக்
தென் மாநிலங்களில் பாஜக பலவீனமாக உள்ளது. கர்நாடகாவில், காங்கிரஸ்-மஜத கூட்டணி அமைத்துவிட்டதால், லோக்சபா தேர்தலின்போது, பாஜகவிற்கு பெரும் அடி கிடைக்க வாய்ப்புள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருப்பதால், தமிழகத்தில் காங்கிரசுக்கு சில எம்.பிக்கள் கிடைக்க வாய்ப்புள்ளது என்கிறதாம் உளவுத்துறை. எனவே காங்கிரஸ் கூட்டணியை தவிர்க்க திமுகவிற்கு பாஜக தலைமை தூதுவிட்டு வருகிறதாம்.

நெருக்கடி ஆரம்பம்
திமுக தலைவர் கருணாநிதியை, பிரதமர் மோடி சந்தித்து நலம் விசாரித்தபோது தொடங்கி, இந்த மூவ் மேற்கொள்ளப்பட்டுக்கொண்டே இருக்கிறதாம். மூன்றாம் அணிக்கு கூட போங்க, காங்கிரசை கழற்றிவிடுங்க.. என்பதே பாஜக தலைமை திமுகவிடம் சொல்லும் விஷயம். ஆனால், இதற்கு திமுக இதுவரை சம்மதம் தெரிவிக்கவில்லையாம். எனவே திமுகவிற்கு இதுவரை குடைச்சல் தராமல் இருந்த பாஜக தலைமை, ஆளுநர் மாளிகை மூலம், குடைச்சலை ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழக வரலாற்றில் முதல் முறையாக முதல் முறையாக, கருப்பு கொடி காட்டியதற்காக திமுகவினர் கைது செய்யப்பட்டு ரிமாண்ட் செய்யப்பட்ட சம்பவம் நாமக்கல்லில் அரங்கேறியது. திமுகவினர் கைது செய்யப்பட்டதில் தொடங்கிய இந்த நெருக்கடி இனி பல தளங்களிலும் திமுகவினருக்கு எதிராக விரிவடையும் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன?












Click it and Unblock the Notifications