மாங்காடு அருகே டிரைவரை தாக்கி கார் கடத்தல்.. 4 மணிநேரத்தில் கார் மீட்பு.. ஒருவர் கைது
கால்டாக்சி டிரைவரை தாக்கி கடத்தப்பட்ட கார் மீட்கப்பட்டது.
Recommended Video

பூந்தமல்லி: மாங்காடு அருகே பரபரப்பு.. கால்டாக்சி டிரைவர் தாக்கி கார் கடத்தல்.. 4 மணி நேரத்தில் துரத்தி துரத்தி சென்று விரட்டி சென்று 4மணி நேரத்தில் கார் மீட்பு. ஒருவர் கைது.
மாங்காடு அடுத்த சிக்கராயபுரம் பகுதியை சேர்ந்தவர் செல்வம், இவர் கால் டாக்சி டிரைவராக வேலை செய்து வருகிறார்.
இன்று அதிகாலை இவரது காரை ஒரு நபர் புக் செய்தார். அதனை தொடர்ந்து வாடிக்கையாளரை அழைத்து செல்ல காரை மாங்காடு அடுத்த பரணிபுத்தூருக்கு காரை எடுத்து சென்றார். நீண்ட நேரம் ஆகியும் வாடிக்கையாளர் வராததால் அதனை கேன்சல் செய்து விட்டார். பின்னர் மதுரவாயல் - தாம்பரம் செல்லும் பைபாசின் சர்வீஸ் சாலையில் காரை நிறுத்தி விட்டு வெளியே நின்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த மூன்று பேர் கத்தியை காட்டி மிரட்டி செல்வத்தை சரமாரியாக தாக்கியதுடன், அவரது காரையும் எடுத்து சென்று விட்டனர். இதில் காயம் அடைந்த செல்வம் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.இதையடுத்து போலீசார் இந்த சம்பவத்தில் மும்முரமாக ஈடுபட்டனர். மாங்காடு, குன்றத்தூர் போலீசார் தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடுதல் வேட்டையையும் உடனடியாக தொடங்கினர்.
அதில், காரில் இருந்த டவர் லொகேஷனில், கார், வண்டலூர் அடுத்த ஊரப்பாக்கத்தில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து லொகேஷன் இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றனர். காரின் அருகே போலீசார் கண்டதும் அந்த மர்ம நபர்கள் காரை எடுத்துக் கொண்டு வேகமாக சென்றனர். உடனே போலீசார் அந்த காரை துரத்தி பிடிக்க தொடங்கினர் சென்றனர்.
இதையடுத்து காரை ஓரமாக நிறுத்து விட்டு மர்ம நபர்கள் தப்பி செல்ல முயன்றனர். எனினும் போலீசார் அவர்களை விரட்டி பிடித்தனர். இதில் ஒருவர் மட்டும் சிக்கினார். அவர் மாங்காட்டை சேர்ந்த அப்துல் அமீது 21, என்பதும், அவர் மீது ஏற்கனவே திருட்டு வழக்கு இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து காரை போலீசார் மீட்டனர். மேலும் தப்பியோடிய இரண்டு பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். 4 மணி நேரத்தில் கடத்தப்பட்ட காரை போலீசார் மீட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications