கொடூர மக்னா யானை.. தேவாரம் அருகே தொழிலாளியை கட்டிலோடு தூக்கி வீசி கொன்ற பயங்கரம்
யானை தாக்கி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
Recommended Video

தேனி: தேனி மாவட்டம் தேவாரம் அருகே யானை தூக்கி வீசியதில் தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தந்தம் இல்லாத ஆண் யானையை மக்னா என்று சொல்வார்கள். ஆண் யானைக்கு தந்தத்தில்தான் வலிமை என்றால் இந்த மக்னா யானைக்கு உடம்பெல்லாம் பலம், இன்னும் சொல்லப்போனால் துதிக்கையில் தந்தத்தின் பலம் உண்டு என்று சொல்வார்கள். அப்படிப்பட்ட மக்னா யானை ஒன்று தேனி மாவட்டத்தில், தேவாரம், போடி மெட்டு போன்ற பகுதிகளில் மக்னா யானை ஒன்று அடிக்கடி நடமாடி வருவதுடன், பயிர்களை சேதப்படுத்தி வருவதாக சொல்லப்பட்டு வந்தது.

மேலும் தேவாரம் மலையடிவார பகுதிகளில் பல ஏக்கர்களில் கடலை விவசாயம் நடைபெற்று வருகிறது. அறுவடைக்கு தயாராகி நின்ற நேரத்தில் காட்டுப் பன்றிகள் கூட்டமாக போய் அனைத்தையும் நாசப்படுத்தி விட்டு சென்றுவிட்டன. இதனால் விவசாயிகள் கடும் அதிர்ச்சியும் கவலையும் அடைந்தார்கள்.
தங்கள் பகுதிகளிலுள்ள விளைநிலங்களை காட்டுப்பன்றிகளும், யானைகளும் பாழ்படுத்தி வருவதால், இதனை தடுக்க தோட்டங்களுக்கு காவல் காக்க ஆட்களை போடலாம் என்று முடிவு செய்தார்கள். அதன்படி இரவு காவல் செய்ய தோட்டங்களுக்கு பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால் அவர்களையும் இந்த மக்னா யானை விட்டு வைக்கவில்லை. துரத்தி துரத்தி தாக்கி வந்திருக்கிறது. தற்போது தேவாரத்தை சேர்ந்த 65 வயதுடைய சேகர் என்பவர் காட்டு பன்றிகளை விரட்டுவதற்காக காவல் பணியில் ஈடுபட்டு வந்தார்.
நேற்று இரவு 10 மணி வரை காட்டு பன்றிகளை எல்லாம் விரட்டிவிட்டு சேகர் தூங்க சென்று விட்டார். அந்த நேரத்தில் மக்னா யானை தோட்டத்துக்குள் புகுந்தது. தூங்கி கொண்டிருந்த சேகரை கட்டிலோடு தூக்கி அலேக்காக வீசியது. இதில் சேகர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இன்று காலை தோட்டத்துக்கு வந்த மற்ற தொழிலாளர்கள் சேகர் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விசாரணை நடத்தி வருகின்றனர். இரவு காவலுக்கு சென்ற தொழிலாளர் யானையால் தூக்கி வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications