தமிழகத்தில் போலி மருத்துவர்கள் இல்லாத நிலையை உருவாக்க விஜயகாந்த் வலியுறுத்தல் !
தமிழக அரசு போலி மருத்துவர்களை ஒழிக்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் போலி மருத்துவர்கள் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் எனவும் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்
சென்னை: தமிழகத்தில போலி மருத்துவர்கள் இல்லாத நிலையை உருவாக்கி, தமிழக மக்களை இந்த அரசு காப்பாற்ற வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பத்திரிகை செய்தியில் தமிழகம் முழுவதும் 30,000 போலி மருத்துவர்கள் உள்ளனர் என்று இந்திய மருத்துவ தலைவர் பாலசுப்ரமணியம் பேட்டி அளித்துள்ளார். தமிழகத்தில் போலி மருத்துவர்களை கண்டிபிடித்து நடவடிக்கை எடுக்க தமிழக அரசும் உத்தரவு பிரபித்துள்ளது.

போலி மருத்துவர்களை கண்டுபிடிப்பதற்காக மருத்துவம், ஊரக நலப்பணிகள், மருந்து கட்டுப்பாட்டு துறைகள் மற்றும் காவல்துறையினரும் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள தாகவும், தமிழகம் முழுவதும் 190 போலி மருத்துவர்கள் சிக்கியுள்ளதாகவும் அரசு, பத்திரிகைகளில் செய்தி வெளியிட்டுள்ளது.
அமைச்சர் விஜயபாஸ்கர் போலி மருத்துவர்கள் 214 பேர் கைது செய்துள்ளதாக திண்டுக்கல் மருத்துவமனை ஆய்வு கூட்டத்தில் கூறியுள்ளார். போலி மருத்துவர்களை கண்டறிய 32 குழுக்கள் நிருவப்பட்டுள்ளதாகவும், தமிழகத்தில் 162 பேர் போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் சுகாதத்துறை அதிகாரி செய்தி வெளியிட்டுள்ளார்.
ஆனால் தமிழக அரசு போலி மருத்துவர்களை ஒழிக்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இந்திய மருத்துவ தலைவர் 22.09.2014 ஆம் நாளில் தமிழகத்தில் 30,000 போலி மருத்துவர்கள் உள்ளதாக தெரிவித்தும், தமிழக அரசு ஏன் போலி மருத்துவர்களை முழுமையாக ஒழிக்காமல் இந்த அரசு உள்ளது. சம்மந்தப்பட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் ஏன் கடமை உணர்வுடன் செயல்படவில்லை. இந்த அரசு ஏன் ஆய்வு செய்யவில்லை.
பலநோக்கு சுகாதார பணிகள் திட்டத்தில் 5,000 மக்களுக்கு இரண்டு சுகாதார பணியாளர்கள் பணிபுரிகிறார்கள். சுகாதார அதிகாரிகள், சுகாதார பணியாளர்களுக்கு அவரவர் எல்லை பகுதிக்குள் செயல்படும் தனியார் மருத்துவமனைகள், மருத்துவம் பார்ப்போர் பட்டியலை தயார் செய்து போலி மருத்துவர்களை கண்டறியும் நிர்வாக அமைப்பு இருந்தும் இதுவரை கண்டறியாமல் இருக்கும் நிலையுள்ளது. இதுவரை திண்டுக்கல், திருவள்ளூர் மாவட்டங்களில் மட்டும் போலி மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது என்று சொல்லும் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஏன் மற்ற மாவட்டங்களில் இப்பணிகுறித்து ஆய்வு செய்யவில்லை.
ஆங்கில பத்திரிகை செய்தியில் பொதுமக்களிடம் இருந்து புகார் கடிதம் பெரும் பட்சத்தில், போலி மருத்துவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கத்தயார் என்று சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தி வெளியிட்டுள்ளார். இச்செயல் "முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல்" இதன்மூலம் மக்களை திசைதிருப்பி, உண்மை நிலையை மறைத்து தவறான செய்தியை கூறும் அமைச்சரின் செயலை தமிழக மக்கள் சிந்திக்க வேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து போலி மருத்துவர்கள் தமிழகத்தில் இல்லாத நிலையை உருவாக்கி, தமிழக மக்களை இந்த அரசு காப்பாற்ற வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications