சட்டென யோசிக்காமல் மாமன்னன் திரைப்படம் குறித்து ஆ ராசா சொன்ன முக்கியமான விஷயம்
சத்தியமங்கலம்: என்னை விட உயர்ந்தவர்கள் யாரும் இல்லை என்பதையும், என்னை விட பிறப்பால் தாழ்ந்தவன் இல்லை, நான் தாழ்த்தவும் மாட்டேன் என்ற தத்துவத்தை உதயநிதி ஸ்டாலின் மாமன்னன் படத்தில் முன் வைத்திருக்கிறார் என்று திமுக எம்பி ஆ ராசா கூறினார்.
மாமன்னன் திரைப்படம் புதுமையான உளவியல் பாங்கினை எடுத்துரைப்பதாகவும் ஆ.ராசா கூறினார்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப் பகுதியில் வசிக்கும் மலையாளி இன மக்களை நீலகிரி தொகுதி எம்பி ஆ.ராசா சந்தித்துப் பேசினார்.

அப்போது அவரிடம் மலையாளி இன மக்கள் சில கோரிக்கைகளை முன் வைத்தனர். முக்கியமாக சாதி சான்றிதழ் தொடர்பாக கோரிக்கை வைத்தனர். இதுபற்றி அவர்கள் கூறும் போது, சாதி சான்றிதழ் வழங்கும் போது, எங்களுக்கு இதர வகுப்பினர் என வருவாய்த்துறை மூலம் சான்று தருகிறார்கள். ஆனால் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் தங்களது உறவினர்களுக்கு தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் சான்றிதழ் தருகிறார்கள். எனவே எங்களுக்கும் தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் வகுப்பு சான்றிதழ் வழங்க வேண்டும் என்றார்கள்.
அப்போதுஅவர்களிடம் பேசிய ஆ ராசா, மலைப்பகுதியில் வசிக்கும் மலையாளி இன மக்களுக்கு பழங்குடியினர் சான்று வழங்கத் தமிழ்நாடு அரசு மூலம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இந்த விஷயம் பிரதமர் மோடி தலைமையிலான அரசின் கையில்தான் அது உள்ளது, இந்த ஆட்சியில் முடியாவிட்டாலும், 2024இல் ஆட்சி மாற்றம் ஏற்படும், அதைத்தொடர்ந்து மலையாளி மக்களுக்குப் பழங்குடியினர் சான்று பெற்றுத் தரப்படும் என்று ஆ.ராசா உறுதி அளித்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஆ.ராசா, மகாராஷ்டிராவில் அஜித் பவார் தலைமையில் தேசியவாத காங்கிரஸ் கட்சி உடைந்து தனி அணியாக சிவசேனா பாஜக கூட்டணிக்கு ஆதரவு அளித்திருப்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்து பேசினார்.அப்போது அவர் கூறுகையில், "தேசியவாத காங்கிரஸ் கட்சி உடைக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியல் இன்னும் நீண்டு கொண்டே போகும். பாஜ
க தேர்தலில் மைனாரிட்டியாக வெற்றி பெற்று மற்ற வெற்றி அடைந்த கட்சிகளை உடைத்து ஆட்சி அமைப்பது, மோடிக்கோ, அமித்ஷாவுக்கோ, பாஜகவுக்கோ புதிதல்ல.மக்கள் அமைதியாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், 2024 நாடாளுமன்றத் தேர்தலின்போது ஆட்சி மாறும்" என்றார்.
பொதுசிவில் சட்டம் குறித்து ஆ ராசா பேசும் போது, பொது சிவில் சட்டத்தை தமிழ்நாடு அரசு எதிர்க்கும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 90களில் பாஜகவுடன் திராவிட முன்னேற்ற கழகம் கூட்டணி வைத்தபோது ராமர் கோயில் கட்டக்கூடாது, பொது சிவில் சட்டம் கொண்டு வரக் கூடாது என்பதை கண்டிப்புடன் வலியுறுத்தியது. திமுக தனது கொள்கையில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளவில்லை என்றார். மேலும் ஆ ராசா கூறும் போது, இந்தியாவில் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்ற சோதனைகளுக்கு எந்த கட்சிகள் பயந்தாலும், திமுக அஞ்சாது என்றார்.
மாமன்னன் படம் குறித்து ஆ ராசா பேசும் போது, "சமூக நீதியை வலியுறுத்தும் விதமாக புதுமையான உளவியல் பாங்கினை மாமன்னன் படம் வெளிப்படுத்தி உள்ளது, மக்களிடத்தில், தங்களை மேல் சாதி என கருதிக் கொண்டிருக்கும் மனிதர்களாக இருந்தாலும், கீழ் சாதி என கருதிக் கொண்டிருக்கும் மனிதர்களாக இருந்தாலும் அவர்களது மனோபாவம் மாற வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. அவர்களின் உளவியல் பார்வை மாற வேண்டும் என்பதை மாமன்னன் வலயுறுத்துகிறது. இதைத்தான் பெரியார், அண்ணா, கருணாநிதி என அனைவரும் சொன்னார்கள்.
என்னை விட உயர்ந்தவர்கள் யாரும் இல்லை என்பதையும், என்னை விட பிறப்பால் தாழ்ந்தவன் இல்லை, நான் தாழ்த்தவும் மாட்டேன் என்ற தத்துவத்தை உதயநிதி ஸ்டாலின் மாமன்னன் படத்தின் மூலம் முன் வைத்திருக்கிறார். இந்த கருத்தை பெரியார், அண்ணா, கருணாநிதி மற்றும் திராவிட மாடல் முன் வைத்ததாகக் கருதி அனைவரும் இப்படத்தைப் பார்க்க வேண்டும்" என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications