பாலியல் தொல்லைக்குள்ளானதாக புகார் அளித்த துணை நடிகை திடீர் மாயம்.. சென்னையில் பரபரப்பு
புகார் அளித்த துணை நடிகை மாயமாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: சென்னையில் தன்னை கத்தி முனையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகாரளித்த நடிகையே மாயமாகி உள்ளதால் போலீசார் குழப்பமடைந்துள்ளனர்.
சென்னை போரூர் சத்யா நகரை சேர்ந்தவர் காயத்திரி. துணை நடிகையான இவர் முன்னணி திரைப்படங்களில் பிரபல நட்சத்திரங்களுடன் துணை நடிகையாக நடித்துள்ளார். கடந்த சில மாதங்களாக பட வாய்ப்புகள் இல்லாமல் சிக்கி தவித்த காயத்திரிக்கு கடந்த வாரம் செல்போனில் அழைப்பு ஒன்று வந்தது.

எதிர் முனையில் இருந்தவர் தன் பெயர் குமார் என்றும் தான் பிரபல சினிமா தயாரிப்பாளர் என்றும் அறிமுகப்படுத்தி கொண்டதுடன் ஒருசில உப்புமா படங்களின் பெயர்களை கூறி அதனை தான் தான் தயாரித்ததாக கூறியதுடன் தான் புதிதாக தயாரிக்க உள்ள திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு தருவதாக ஆசையை வளர்த்துள்ளார்.
தயாரிப்பாளர் என அறிமுகம்
ஏற்கனவே பட வாய்ப்புகள் இன்றி வீட்டில் கூனி குறுகி தவித்த காயத்திரிக்கு குமாரின் பேச்சு கதாநாயகியாக வேண்டும் என்ற ஆசையை தூண்டியது. இதனால் மனதை சிதறவிட்ட காயத்திரி குமாரின் பேச்சுக்கு அடிபணிந்துள்ளார். அடுத்தநாள் காயத்திரியை தொடர்பு கொண்ட குமார் போரூரில் உள்ள தனது அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும் படி கூறியுள்ளார். குமாரின் வலையில் விழுந்த காயத்திரி போரூர் சென்றுள்ளார். அப்போது அலுவலகத்தில் குமார் இல்லை. அவர் அலுவலகத்தில் இருந்தவர்கள் குமார் ஷீட்டிங்கிற்கு லோகேசன் பார்ப்பதாக சென்றுள்ளதாகவும் அங்கு சென்று அவரை சந்திக்கலாம் என்று கூறியுள்ளனர்.
செல்போனில் வீடியோ
அவர்களின் பேச்சையும் நம்பிய காயத்திரி உடனே கால் டாக்ஸி ஒன்றை புக் செய்து புறப்பட்டுள்ளார். காயத்திரிக்கு இடம் தெரியாததால் குமாரின் ஆள் ஒருவர் காயத்திரியுடன் காரில் பயணம் செய்துள்ளார். இருவரும் குன்றத்தூர் பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு மாடி வீட்டிற்கு அழைத்து சென்று காயத்திரி வீட்டிற்குள் சென்றதும் கதவை தாழிட்டுள்ளனர். வீட்டிற்குள் மது போதையில் குமார் தன் கையில் இருந்த கத்தியை காட்டி காயத்திரியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். குமார் ஒரு அறையில் இருக்கும்போது அவருடன் இருந்த நண்பர்கள் மது அருந்தியதுடன் அவர்களும் காயத்திரியை சின்னாபின்னமாக்கினர். மூவரின் சின்னாபினத்திற்கு ஆளான காயத்திரியை அவர்கள் தங்களின் செல்போன்களில் படமும் பிடித்துள்ளனர். மேலும் இது குறித்து வெளியே கூறினாலோ அல்லது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தாலோ தாங்கள் எடுத்துள்ள வீடியோக்களை இன்டர்நெட்டில் போட்டுவிடுவதாக மிரட்டியுள்ளனர்.
போலீசில் புகார்
மேலும் காயத்திரி அணிந்திருந்த நகை மற்றும் பணத்தையும் பிடுங்கி கொண்டுள்ளனர். குமார் மற்றும் அவரது ஆட்களிடம் இருந்து தப்பிக்க காயத்திரி அவர்கள் கூறியபடி நடந்துள்ளார். ஒரு கட்டத்தில் குமாரும் அவரது நண்பர்களும் காயத்திரியை அங்கிருந்து கிளம்ப அனுமதித்துள்ளனர். நரகாசுரர்களின் பிடியில் சிக்கிய காயத்திரி அங்கிருந்து தப்பித்து வீட்டிற்கு சென்று குமுறியபடியே நடந்த விஷயம் அனைத்தையும் கூறியுள்ளார். இது குறித்து காயத்திரியும் அவரது வீட்டினரும் நடந்த விஷயத்தை புகாராக எழுதி குன்றத்தூர் காவல் நிலையத்தில் கொடுத்துள்ளனர். காயத்திரியின் புகாரை பெற்ற காவல் ஆய்வாளர் விசாரணை செய்ய தொடங்கினார்.
குழம்பியுள்ள போலீஸார்
காயத்திரி கொடுத்த புகார் குறித்து போலீசார் விசாரணை செய்வதற்காக அவரது வீட்டிற்கு சென்ற போது அங்கு காயத்திரி இல்லை. வீட்டில் இருந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திய போது வெளியூர் சென்று விட்டதாக கூறியுள்ளனர். காலையில் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து விட்டு எப்படி வெளியூர் சென்றிருப்பார் என்று போலீசார் குழம்பியுள்ளனர். மேலும் காயத்திரியிடம் விசாரணை செய்தால் தான் குற்றவாளிகளை பிடிக்க முடியும் ஆனால் சம்மந்தப்படவரே இல்லை என்றால் என்ன செய்வது என்று போலீசார் புலம்பி தவிப்பதுடன் உண்மையிலேயே காயத்திரி கொடுத்த புகார் உண்மைதானா என்ற விசாரணையில் தற்போது போலீசார் இறங்கியுள்ளனர். போலீசாரையே குழப்பியுள்ள காயத்திரியை முதலில் பிடிப்போம் அப்புறம் குற்றவாளிகளை பிடிப்போம் என்று சபதம் எடுத்த போலீசார் காயத்திரியை பிடிக்க முயன்று வருகின்றனர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications