இதான் கபாலி ரஜினி பவர்... செய்தி சேனல்களின் பார்வையாளர் எண்ணிக்கை 40 சதம் வரை உயர்வு!
சென்னை: ரஜினியின் தாக்கம் மீடியா உலகில் எந்த அளவுக்கு உள்ளது என்பது எல்லோரும் அறிந்ததுதான். ஒரு சாதாரண செய்தியாக இருந்தாலும், அது ரஜினி தொடர்புடையதாக இருந்தால் பார்வையாளர், படிப்பவர் எண்ணிக்கை பல மடங்கு இருக்கும்.
அதனால்தான் அச்சு ஊடகத்தில் பத்திரிகைகள் அவர் தொடர்பான அத்தனை செய்திகளையும் முதன்மையான இடத்தில் வைக்கின்றன. வாரமிருமுறை, வார, மாத இதழ்களில் அவரது முகம்தான் அட்டையில் அதிக அளவில் பிரசுரமாகிறது.

குறிப்பாக கபாலி படம் ஆரம்பித்ததிலிருந்து, படம் வெளியாகி, இதோ ஒரு வாரம் கடந்த நிலையிலும் ரஜினி, கபாலி ஆகிய இரண்டு சொற்கள்தான் அதிகம் ஊடகங்களில் இடம்பெற்று வருகின்றன.
கபாலி ரிலீசிலிருந்து முதல் ஒரு வாரம் வரை, தினசரி கபாலி ஸ்பெஷல் நிகழ்ச்சிகளை எல்லா சேனல்களுமே ஒளிபரப்பின. காரணம் அதுதான் அதிக டிஆர்பியை பெற்றுத் தந்துள்ளது.
கபாலி ரஜினி எஃபெக் எந்த அளவு மீடியாவில் உள்ளது...
இதோ ஒரு புள்ளி விவரம். இது அச்சு, ஆன்லைன் ஊடகங்கள் தவிர்த்து, செய்திச் சேனல்களில் ரஜினியின் தாக்கம் எவ்வளவு என்பதைச் சொல்லும் புள்ளி விவரம்.
தமிழில் அனைத்து செய்தி மற்றும் பொழுதுபோக்குச் சேனல்களின் பார்வையாளர் எண்ணிக்கையும் 37 சதவீதம் உயர்ந்துள்ளது. கபாலிக்கு முன்புவரை தமிழ் சேனல்களின் பார்வையாளர் எண்ணிக்கை சராசரியாக 13547 (ஆயிரம்களில்) ஆக இருந்தது. ஆனால் கபாலி கவரேஜ் மூலம் 37 சதவீதம் உயர்ந்து 18509 ஆக உயர்ந்துள்ளது.
கன்னட சேனல்கள் கபாலி கவரேஜ் மூலம் 29 சதவீத பார்வையாளர்களை கூடுதலாகப் பெற்றுள்ளது.
தெலுங்கில் கொஞ்சம் குறைவு. கபாலி எஃபெக்டால் தெலுங்கில் 14 சதவீதம் கூடுதல் பார்வையாளர்கள் கிடைத்துள்ளனர்.
கபாலி எஃபெக்ட் பெரிய அளவுக்கு ஒர்க் அவுட் ஆகியுள்ளது மலையாளத்தில். இங்கு கபாலி கவரேஜ் மூலம் 40 சதவீதம் கூடுதல் பார்வையாளர்களைப் பெற்றுள்ளன மலையாளம் சேனல்கள்.
அச்சு மற்றும் ஆன்லைன் ஊடகங்களைக் கணக்கில் எடுத்தால் சுவாரஸ்யமான புள்ளி விவரங்கள் கிடைக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்?












Click it and Unblock the Notifications