கலகலன்னு பேசிய 10-ம் வகுப்பு மாணவன்.. கடகடன்னு கூட்டிக் கொண்டு மாயமான 40 வயசு ஆசிரியை..!
10-ம் வகுப்பு மாணவனை கடத்திய ஆசிரியை கைது செய்யப்பட்டார்.
Recommended Video

சென்னை: ஒரு பள்ளி ஆசிரியை செய்த காரியம் இன்று இரு மாநில மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
கேரளாவின் ஆலப்புழா அருகே உள்ள இடம் சேர்த்தலா முகம்மா. இங்கு ஒரு தனியார் ஆங்கில பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் பணியாற்றும் ஆசிரியை ஃபெரோனா. 40 வயது. திருமணமாகி கணவனை பிரிந்து வாழ்ந்து வருகிறார். ஆனால் 10 வயதில் ஒரு மகன் இருக்கிறான்.

நெருங்கி பழகினார்
ஆசிரியைக்கு அதே பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவனை மிகவும் பிடித்து போயிற்று. இதனால் வகுப்பு நேரம் முதல் எல்லா நேரமும் அந்த மாணவனிடம் பேசிக் கொண்டே இருந்துள்ளார். விரைவில் அந்த மாணவனிடம் ஆசிரியை என்பதையும் மறந்து நெருங்கி பழகி வந்துள்ளார். மாணவன் இயல்பாகவே கலகலவென்று பேசும் சுபாவம் உடையவன். அத்துடன் அவனது பேச்சு தனிமையில் வாழ்ந்து கொண்டிருந்த ஆசிரியைக்கு பிடித்து போயிற்று.

மணிக்கணக்கில் பேசுவர்
பள்ளி முடிந்து வீட்டுக்கு போனாலும் மாணவனின் பேச்சை கேட்காமல் ஃபெரோனாவால் இருக்க முடியவில்லை. அதனால் வீட்டுக்கு போனாலும் தம்மிடம் மாணவன் பேச வேண்டும் என்பதற்காக ஒரு செல்போனையும் அவனுக்கு வாங்கி கொடுத்துள்ளார். பள்ளியில் பேசுவது போதாதென்று இருவரும் தங்களது வீட்டில் இருந்துகொண்டு மணிக்கணக்கில் பேசி வந்துள்ளனர்.

போலீசில் புகார்
இந்நிலையில், கடந்த 23ம் தேதி மாணவனை அவரது வீட்டில் காணவில்லை. இதனால் அதிர்ச்சியும், பதற்றமும் அடைந்த மாணவனின் பெற்றோர், உடனடியாக முகம்மா போலீசில் புகார் அளித்தனர். அத்துடன், நண்பர்கள், உறவினர்கள் வீடுகளிலும் மாணவனை தேடி வந்தனர்.

தனிப்படை அமைப்பு
பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் உடனடி நடவடிக்கை எடுத்தனர். அப்போது பள்ளியில் விசாரணை நடத்தியபோது, குறிப்பிட்ட ஆசிரியையும் மாயமாகி இருப்பது தெரியவந்தது. எனவே சந்தேகமடைந்த போலீசார், தனிப்படை ஒன்றினை அமைத்து மாயமான, ஃபெரோனா, மற்றும் மாணவனை தேடி வந்தனர்.

குடும்பம் நடத்திய ஆசிரியை
இந்நிலையில் சென்னையில் இருவரையும் போலீசார் கண்டுபிடித்தனர். மாணவனை கடத்தி வந்த ஆசிரியை சூளைமேட்டில் ஒரு அறை எடுத்து குடும்பம் நடத்தி வந்ததும் தெரியவந்தது. ஆசிரியை ஃபெரோனா கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வெட்க கேடானது
எத்தனையோ ஆசிரியர்கள் இன்று தங்கள் தொழிலை தெய்வமாகவும், உயிராகவும் மதித்து வருகின்றனர். ஆனால் ஃபெரோனா போன்றவர்கள் இந்த ஆசிரியை தொழிலுக்கே லாயக்கில்லை. பிள்ளை போல பாவிக்கும் மாணவனிடம் இப்படி தரம் தாழ்ந்து நடப்பது வெட்கக் கேடான செயல். தன் சுய விருப்பத்திற்காக ஒரு திருமணத்தை செய்து கொண்டு போவதை விட்டுவிட்டு, இப்படி படிக்கும் பிள்ளையை சீரழித்து அவன் வாழ்வை பாழாக்க நினைக்கும் ஆசிரியைக்கு துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications