குஜராத் மோடியா? இந்த தமிழ்நாட்டு லேடியா? யார் சிறந்த நிர்வாகி?: ஜெயலலிதா 'பஞ்ச்' டயலாக்!
சென்னை: இந்தியாவின் சிறந்த நிர்வாகி மோடி இல்லை.. இந்த லேடிதான் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா தன்னைத் தானே பெருமிதத்துடன் கூறிக் கொண்டார்.
தென்சென்னை தொகுதிக்குட்பட்ட கந்தன்சாவடியில் அ.தி.மு.க வேட்பாளர் ஜெயவர்த்தனை ஆதரித்து நேற்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட முதலமைச்சர் ஜெயலலிதா பேசியதாவது:
'தற்போதுள்ள மோசமான சூழ்நிலையை சுதந்திர இந்தியா இதுவரை சந்தித்ததில்லை. தமிழர் விரோதப் போக்குடன் செயல்பட்ட மத்திய அரசில் தி.மு.க. அங்கம் வகித்தது. சென்னை மாநகராட்சியில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. அளித்த 178 வாக்குறுதிகளில் 150 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால், நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவையை அ.தி.மு.க. அரசு நிறைவேற்றியுள்ளது.
தமிழர்களின் உரிமைகளை பாதுகாக்கும் அரசு மத்தியில் அமைய வேண்டும். காங்கிரசுக்கு ஆதரவான போக்கை தி.மு.க. கொண்டிருக்கிறது.
வெளிநாட்டில் இருந்து கார் இறக்குமதி செய்த வழக்கிற்காக காங்கிரசை தி.மு.க. விமர்சனம் செய்யவில்லை. அதேபோல், தி.மு.க. ஆதரவு தேவைப்படும் என்பதால் காங்கிரசும் நடவடிக்கை எடுக்கவில்லை.
கார் இறக்குமதி குறித்து கருணாநிதி, ஸ்டாலின் பதிலளிக்க வேண்டும். குஜராத் மாநிலத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழ் இருப்போர் 16.6 சதவிகிதம். அதே, தமிழகத்தில் 11.3 சதவிகிதம் தான் உள்ளனர்.

குஜராத் வளர்ந்துள்ளதாக கூறுவது தவறு. உணவு தானிய உற்பத்தி குஜராத்தில் 88.74 மெட்ரிக் டன் தான். ஆனால், தமிழகத்தில் 101.57 மெட்ரிக் டன். அதேபோல், மகளிருக்கான குற்றங்கள் 65 சதவிகிதம் குஜராத்தில் அதிகரித்துள்ளது.
ஆனால், தமிழகத்தில் 29 சதவிகிதம் குறைந்துள்ளது. தமிழகத்தில் உள்ள 36,996 தொழிற்சாலைகளில் அம்மாநிலத்தை விட 5 லட்சத்து 40 ஆயிரம் தொழிலாளர்கள் அதிகமாக பணிபுரிகின்றனர்.
இந்தியாவின் சிறந்த நிர்வாகி குஜராத்தின் மோடி இல்லை. இந்த லேடி தான்.
இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.
ஒரே இடத்தில் 41 வேட்பாளர்கள்
இதன் பின்னர் சென்னை தியாகராயர் நகரில் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் ஜெயலலிதா பிரசாரம் மேற்கொண்டார். அந்த பிரசார கூட்டத்தில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் 40 பேரும், ஆலந்தூர் சட்டசபை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரும் பங்கேற்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications