அண்ணா நூற்றாண்டு நூலகத்தை ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவு
சென்னை: அண்ணா நூற்றாண்டு நூலகத்தை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி வழக்கறிஞர் குழுவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கோட்டூர்புரத்தில் 2010 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் "அண்ணா நூற்றாண்டு நூலகம்" கட்டப்பட்டது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் இந்த நூலகம் சரியாக பராமரிக்காமல் உள்ளது என்று குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து ஓய்வுப்பெற்ற பேராசிரியர் மனோன்மணி என்பவர் ஹைகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில் கடந்த திமுக ஆட்சிகாலத்தில் கட்டபட்ட அண்ணா நூற்றாண்டு நூலகம் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு சரியாக பராமரிக்கப்படவில்லை என தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் நீதிபதி சுந்தரேஷ் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் முறையான பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் பராமரிப்பு பணிகளில் குறைபாடுகள் உள்ளதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் வரும் மார்ச் 10 தேதிக்கு பிறகு நூலகத்தில் ஆய்வு செய்ய வழக்கறிஞர் குழுவுக்கு உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கை ஏப்ரல் 15ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
-
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
திருப்பரங்குன்றம் மலை அளவீடு.. தொல்லியல் துறை சொன்ன தகவல்.. உடனே ஐகோர்ட் போட்ட உத்தரவு! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு?












Click it and Unblock the Notifications