ஆர்.கே.நகர் தொகுதி காலியாக இருப்பதாக அறிவிப்பு...விரைவில் இடைத்தேர்தல் ?
சென்னை ஆர்.கே.நகர் சட்டசபைத் தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவை அடுத்து ஆர்.கே.நகர் தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை சட்டசபை செயலாளர் ஜமாலுதீன் இன்று வெளியிட்டுள்ளார்.
2016ம் ஆண்டு சட்டசபை பொது தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் ஆர். கே.நகரில் போட்டியிட்டார் ஜெயலலிதா. அவரை எதிர்த்து பெண் வேட்பாளர்கள் பலரையும் எதிர் கட்சியினர் களமிறக்கினர். எனினும் ஜெயலலிதா வெற்றி பெற்று முதல்வரானார்.

5 மாத காலத்திற்குள் அதாவது செப்டம்பர் 22ம் தேதி அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. 75 நாட்கள் சிகிச்சை பெற்றும் சிகிச்சை பலனின்றி டிசம்பர் 5ம் தேதி மரணமடைந்தார். இதனையடுத்து ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதி காலியாக இருந்தது.
இந்நிலையில் ஜெயலலிதா மறைவை அடுத்து ஆர்.கே.நகர் சட்டசபைத் தொகுதி காலியாக இருப்பதாக சட்டப்பேரவை செயலாளர் ஜமாலுதீன் இன்று அறிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப்பின் ஆர்.கே.நகர் தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு தொகுதியில் எம்.எல்.ஏ மரணமடைந்தால், அந்த தொகுதிக்கு 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடைபெற வேண்டும். அதன்படி விரைவில் ஆர். கே. நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications