4 டிஎம்சி காவிரி நீரையும் தராவிட்டால் கர்நாடக அரசை கலையுங்கள்-அய்யாக்கண்ணு ஆவேசம்
நீதிமன்ற உத்தரவை பின்பற்றாத கர்நாடக ஆட்சியை கலையுங்கள் என அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.
Recommended Video

தஞ்சை: தமிழகத்துக்கு 4 டி.எம்.சி. நீர் தர உத்தரவிட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது என விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு கருத்து தெரிவித்துள்ளார். அத்துடன், நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தவில்லை என்றால் கர்நாடகத்தில் ஆட்சியை கலைக்க வேண்டும் எனவும் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
காவிரி விவகாரம் தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, செயல்திட்ட அறிக்கையை தாக்கல் செய்ய மத்திய அரசு மேலும் கூடுதல் அவகாசம் கேட்டதிற்கு பல்வேறு தரப்பினர் தங்களது கண்டனங்களையும், கருத்துக்களையும் பதிவு செய்து வருகின்றனர்.

அதன்படி, விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தமிழகத்துக்கு 4 டிஎம்சி நீர் தர உத்தரவிட்ட உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அதிர்ச்சியளிப்பதாக கூறினார்.
உச்சநீதிமன்றம் தீர்ப்புப்படி தமிழ்நாட்டுக்கு கர்நாடக அரசு தண்ணீர் தர வேண்டும். அப்படி நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தவில்லை என்றால் கர்நாடக அரசை கலைக்க வேண்டும் என அய்யாக்கண்ணு ஆவேசத்தோடு தெரிவித்தார்.
-
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications