ஜல்லிக்கட்டுக்கு தடை போடுவதா?: மதுரை ஆதீனம் கண்டனம்
மதுரை: ஜல்லிக்கட்டுக்கு தடை கோரி வழக்கு தொடர்ந்த பிராணிகள் நல வாரிய நடவடிக்கைக்கு மதுரை ஆதீனம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை அவனியாபுரம்,அலங்காநல்லூர்,பாலமேடு உள்ளிட்ட பகுதிகளில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

இதுகுறித்து மதுரை ஆதீனம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
பிராணிகள் நல வாரியம் என்றால் என்ன? தமிழகத்தில் இருந்து தினசரி லாரிகளில் பசு மாடுகள், எருமை மாடுகள், காளை மாடுகள் இவைகளை சித்ரவதைக்கு உள்ளாக்கி, கேரளாவுக்கு கொண்டு செல்கிறார்களே இதை தடுத்து நிறுத்தியிருக்கலாமே?
அப்படிப்பட்ட கால்நடைகளை, மனிதாபிமானமே இல்லாமல் கொன்று குவித்து நாட்டின் பல பகுதிகளில் ஆயிரக்கணக்கான மாட்டுக் கறிக்கடைகள் உள்ளனவா? அந்த கடைகளுக்கு முன்புறம் மாட்டு இறைச்சிக்கடை என பெயர் பலகைகள் வைத்திருக்கிறார்களே? இது பிராணிகள் நல வாரியத்துக்கு தெரியாதா?
உண்மையிலேயே இந்த வாரியத்திற்கு அக்கறை இருக்குமேயானால் இவைகளை தடை செய்திருக்கலாமே? அப்படி செய்திருந்தால் பிராணிகள் நல வாரியம் என்னும் பெயர் பொருத்தமாக இருந்திருக்கும். இவைகளை விட்டு விட்டு தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை தடை செய்திட வழக்கு போடுவது எந்த வகையில் நியாயம்? இவ்வாறு மதுரை ஆதினம் கூறியுள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications