ஓடும் ஆட்டோவில் அத்துமீறிய டிரைவர்.. தப்பி குதித்து ஓடிய மாணவி.. சென்னையில் பயங்கரம்!
கல்லூரி மாணவியை மானபங்கப்படுத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
Recommended Video

சென்னை: சென்னையில் ஆட்டோவில் சென்ற கல்லூரி மாணவியை வன்கொடுமை செய்ய முயற்சி செய்த ஓட்டுனர் உட்பட 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
சென்னை கிண்டியிலிருந்து அய்யப்பன்தாங்கல் செல்லும் ஆட்டோ ஒன்றில் கல்லூரி மாணவி ஒருவர் ஏறினார். ஆட்டோ சென்றுகொண்டிருக்கும்போது, ஓட்டுனரும் மற்றொரு நபரும் மாணவியிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாக கூறப்படுகிறது. மேலும் மாணவியை கடத்தி வன்கொடுமை செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால் அவர்களிடமிருந்து தப்பிக்க நினைத்த மாணவி திடீரென்று ஆட்டோவிலிருந்து கீழே குதித்து தப்பினார். பின்னர் இதுகுறித்து தன்னுடைய தந்தையிடம் அழுதவாறே முறையிட்டார். இதனையடுத்து, அவரது தந்தை போலீசில் மகளுக்கு நடந்த சம்பவத்தை குறித்து புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை கையிலெடுத்தனர்.
ஆட்டோ சென்ற வழியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து ஆய்வு செய்தனர். அதில் சந்தேகத்திற்கிடமான ஆட்டோ சிக்கியது. அதனை தொடந்து கொசப்பேட்டையை சேர்ந்த ஜனார்த்தனன், கோவூரை சேர்ந்த பவீன் ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்களிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications