ராத்திரி 11 மணி.. காதலியுடன் தனிமையில் இருந்த கணவன்.. கையும் களவுமாக பிடித்த மனைவி.. நடந்த ட்விஸ்ட்
நெல்லை: நெல்லை பேட்டையில் பூட்டிய வீட்டிற்குள் 'காதலியுடன் இருந்த தனியார் நிறுவன ஊழியரை கையும் களவுமாக மனைவி பிடித்தார். உறவினர்களுடன் மனைவி திரண்டு வந்த நிலையில், போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு என்ன நடந்து என்பதை பார்ப்போம்.
நெல்லை கங்கைகொண்டான் சிப்காட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் ராஜாவுக்கு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மனைவி மற்றும் குழந்தை உள்ளது. இவர் நெல்லை வடக்கு தாழையூத்தில் வசித்து வருகிறார்.
ராஜாவுக்கும் வடக்கு தாழையுத்தைச் சேர்ந்த 30 வயதுடைய திருமணமான மீனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இளம்பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இருவருக்கும் இடையே நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. அந்த இளம்பெண்ணுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். அவருடைய கணவர் வெளியூரில் வேலை செய்து வருகிறார்.
ராஜா மற்றும் மீனாவின் கள்ளக்காதல் ஒரு காலக்கட்டத்தில் வெளியே தெரியவந்தது. இரு குடும்பத்தினருக்கு தெரியவந்ததால் அவர்களை கடுமையாக கண்டித்தனர். இதுகுறித்து ராஜாவின் மனைவி தாழையூத்து போலீசில் புகார் அளித்தனர் . இதையடுத்து ராஜாவையும் மீனாவையும் எச்சரித்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து சச்சரவுகளுக்கு பின்னர் மீனா பேட்டையில் குடியேறினார் தனியார் நிறுவன ஊழியரும், மீண்டும் அந்த இளம்பெண்ணிடம் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு கள்ளக்காதலை வளர்த்து வந்தார்கள்.
இதனை அறிந்த ராஜாவின் மனைவி, தனது கணவரை கையும் களவுமாக பிடிக்க திட்டம் தீட்டி வந்தார். நேற்று முன்தினம் இரவில் தனியார் நிறுவன ஊழியர் கள்ளக்காதலி வீட்டில் தங்கி இருக்கிறார். நள்ளிரவு 11 மணியளவில் அந்த இளம்பெண்ணின் வீட்டை தனியார் நிறுவன ஊழியரின் மனைவி, அவருடைய தந்தை, சகோதரர்கள், உறவினர்கள் சுற்றி வளைத்து கதவை தட்டினார்கள்
ஆனால் நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படவில்லை. இதுகுறித்து பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கதவை தட்டினர். பின்னர் உள்ளே இருந்த கள்ளக்காதல் ஜோடி கதவை திறந்தனர். உள்ளே சென்ற போலீசார், கள்ளக்காதல் ஜோடியை கடுமையாக எச்சரித்தனர்.
அதன்பின்னர் ராஜாவின் குடும்பத்தினரை சமரசம் செய்த போலீசார், இதுதொடர்பாக அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்குமாறு அறிவுறுத்தினார்கள். பின்னர் அங்கிருந்தவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் நெல்லை பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications