For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குப்பை போல் லாரியில் இருந்து கொட்டப்பட்ட காட்டு மாடு.. கதறி துடித்து பலி.. சேலத்தில் சோகம்

சேலம் அருகே லாரியில் இருந்து கவிழ்க்கப்பட்ட காட்டு மாடு அந்த இடத்திலேயே கத்தி உயிரிழந்தது.

Google Oneindia Tamil News

Recommended Video

    லாரியில் இருந்து கொட்டப்பட்ட காட்டு மாடு கதறி துடித்து பலி- வீடியோ

    சேலம்: அருகே லாரியில் இருந்து கவிழ்க்கப்பட்ட காட்டு மாடு அந்த இடத்திலேயே கத்தி உயிரிழந்தது. காட்டு மாடு உயிரிழப்புக்கு வனத்துறையே காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

    சேலம் ஏற்காடு மலையில் இருந்து கடந்த 2 நாட்களுக்கு முன் ஒரு காட்டுமாடு, மலை அடிவாரமான கன்னங்குறிச்சி மூக்கனேரி பகுதிக்கு வந்தது. அங்குள்ள அண்ணாமலை என்பவரது விவசாய தோட்டத்திற்குள் புகுந்து, அங்குமிங்கும் ஓட்டம் பிடித்தது.

    இதை பார்த்த அப்பகுதி மக்கள், காட்டுமாட்டை விரட்ட பட்டாசுகளை வாங்கி வெடித்தனர். இதுபற்றி தகவல் அறிந்த சேலம் வனத்துறையினரும் வந்து, காட்டுமாட்டை மீட்டு வனத்தில் விட நடவடிக்கை எடுத்தனர்.

    காட்டு மாட்டிற்கு மயக்க ஊசி

    காட்டு மாட்டிற்கு மயக்க ஊசி

    தொடர்ந்து, 2 நாட்களாக சரியாக உணவு உட்கொள்ளாமல், மிரண்டு ஓடியதால், காட்டுமாடு சோர்வடைந்தது. 3வது நாளான நேற்று, வனவிலங்குகள் மருத்துவர் மனோகரன், துப்பாக்கி மூலம் காட்டுமாட்டிற்கு மயக்க ஊசி போட்டார்.

    குப்பை போல் கொட்டப்பட்ட வீடு

    குப்பை போல் கொட்டப்பட்ட வீடு

    பின்னர், ஒரு லாரியில் ஏற்றி ஏற்காட்டு மலைக்கு கொண்டுச் சென்றனர். ஏற்காடு வழுக்குபாறை பகுதிக்கு சென்றதும், காட்டுமாட்டை அப்படியே குப்பையை கொட்டுவது போல் கொட்டிவிட்டனர்.

    வவலியால் துடித்து கதறியது

    வவலியால் துடித்து கதறியது

    இதனால், மிக சத்தமாக கத்தி கதறியது காட்டுமாடு. பின்னர், எழுந்திரிக்க முடியாமல் வலியால் துடித்தது அந்த மாடு. உடனே, சிகிச்சை அளிக்கும் பணியை வனத்துறையினர் மேற்கொண்டனர். ஆனால், காட்டுமாடு பரிதாபமாக இறந்தது.

    அங்கேயே புதைத்தனர்

    அங்கேயே புதைத்தனர்

    இதன்பின், அங்கேயே சேலம் கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் தேவேந்திரன் தலைமையில் மருத்துவக்குழுவினர் பிரேதப்பரிசோதனையை செய்தனர். பின்னர், காட்டுமாட்டை அந்த பகுதியில் புதைத்தனர்.

    வனத்துறையே காரணம்

    வனத்துறையே காரணம்

    காட்டு மாட்டை வனத்துறையினர் குப்பையை கொட்டுவது போல் கொட்டியதே அது இறந்ததற்கு காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். காட்டுமாட்டின் சாவுக்கு காரணமான வனத்துறை அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விலங்குகள் நல ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    English summary
    The wild cow was thrown out of the lorry near Salem as trash. The public has blamed the forest officers cause for wild cow dead.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X