உள்ளாட்சி தேர்தலில் ஓட்டுக்கு அதிக பணம் கொடுக்க திருட்டில் ஈடுபட்ட கவுன்சிலர் கைது
கடலூர்: கடலூர் அருகே வரும் உள்ளாட்சி தேர்தலில் ஓட்டுக்கு அதிக பணம் கொடுக்க திருட்டில் ஈடுபட்ட கவுன்சிலர் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே சித்தாலிக்குப்பத்தில் வசிப்பவர் வெங்கடாசலம் (வயது 75). என்.எல்.சி. நிறுவனத்தில் ஓய்வு பெற்ற இவர் பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். கடந்த 6ஆம் தேதி இவரது வீட்டில் ஒரு கும்பல் புகுந்து வீட்டில் இருந்து 33 லட்சம் ரொக்கம், இரண்டு லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றது.

மாவட்ட எஸ்.பி. விஜயகுமார் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் தவமணி, சரவணன், புகழேந்தி, கண்ணன், நடராஜன் தலைமையில் 5 தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இதில் ஆளுர் அகரத்தைச் சேர்ந்த மாயவேல் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் சசிகுமார், மணிவேல், ராஜசேகர் ஆகியோரும் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்களும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் 33 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்தையும், மேலும் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வீட்டில் 65 ஆயிரம் ரூபாய் கொள்ளையடித்தையும் ஒப்புக்கொண்டனர்.
விசாரணையில் மாயவேல் கூறியதாவது, கடந்த உள்ளாட்சித் தேர்தலில் வார்டு கவுன்சிலராக போட்டியிட்டு வெற்றி பெற்றேன். வரும் உள்ளாட்சித் தேர்தலில் ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிட உள்ளேன். இப்போது அனைவரும் ஓட்டுக்கு அதிக பணம் கொடுக்கிறார்கள். நானும் கொடுக்க வேண்டும். அதற்காகத்தான் கொள்ளையடித்தேன் என கூறியுள்ளார். மாயவேலின் பதிலால் விசாரணை நடத்திய தனிப்படை போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications