ஜெ. மறைவால் புறக்கணிக்கப்பட்ட ஆர்.கே.நகர் தொகுதி.. 4 நாட்களாக குடிநீர் சப்ளையில்லை.. மக்கள் மறியல்
ஜெயலலிதா மறைந்து ஒரு வாரம் ஆகியுள்ள நிலையில், அவரது சட்டசபை தொகுதியான ஆர்.கே.நகர், ஆட்சியாளர்களால் கண்டுகொள்ளாமல் விடப்பட்டுள்ளது.
சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சட்டசபை தொகுதியான சென்னை, ஆர்.கே.நகர் அரசால் கைவிடப்பட்டுவிட்டதோ என்று கேள்வி எழுப்புகிறார்கள் அப்பகுதி மக்கள்.
வர்தா புயல் கடந்து சென்றபிறகு 4 நாட்களாகியும், ஆர்.கே.நகரில் இன்னமும் முழுமையாக மின்சார சப்ளை இல்லை. குடிநீர் வினியோகமும் கிடையாது.

வெறுத்துப்போன மக்கள் சாலை மறியல் நடத்தியனர். பெண்கள் காலி குடங்களோடு சாலையில் அமர்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்ட, இந்திரா என்ற பெண்மணி இதுகுறித்து கூறுகையில், ஜெயலலிதாவின் தொகுதியாக ஆர்.கே.நகர் மாறிய பிறகு பொதுப் பிரச்சினைக்காக மக்கள் நடத்தும் முதலாவது போராட்டம் இதுதான். முதல்வராக இருந்தவர் தொகுதியிலேயே 4 நாட்களாக தண்ணீர் சப்ளை இல்லை. குடிக்கவோ, கழிவறைக்கு பயன்படுத்தவோ தண்ணீர் இன்றி மக்கள் தவிக்கிறார்கள் என்றார்.
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது ஆர்.கே.நகர் அவரது செல்லப் பிள்ளையாக கருதப்பட்டது. கடந்த வருடம் வெள்ள சேதம் ஏற்பட்டபோது கூட வேறு எந்த பகுதிக்கும் செல்லாத ஜெயலலிதா, ஆர்.கே.நகர் மட்டுமே சென்று மக்களை பார்வையிட்டார்.
ஜெயலலிதா மறைந்து ஒரு வாரம்தான் முடிந்துள்ள நிலையில், ஆர்.கே.நகர் தொகுதி அனாதையாக விடப்பட்டுள்ளதாக குமுறுகிறார்கள் தொகுதியில் வசிக்கும் மக்கள்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications