தேனாம்பேட்டையில் 2 மாடிக் கட்டிடம் சரிந்து விழுந்ததில் 20 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைப்பு
சென்னை: தேனாம்பேட்டையில் உள்ள 2 மாடி கட்டிடம் திடீரென சரிந்து விழுந்ததில் 20 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது.
கட்டிடம் திடீரென்று சரிந்ததில் அதிர்ச்சி அடைந்த வாடகைதாரர்கள் அலறி அடித்து வெளியே ஓடினர். தேனாம்பேட்டை பக்தவச்சலம் தெருவில் வேலன் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
தரை தளம் உள்பட 2 தளத்திலும் வாடகைதாரர்கள் வசித்து வருகின்றனர். தற்போது, அந்த வீட்டில் தொட்டி அமைக்கும் பணி நடந்து வருகிறது. வீட்டு வளாகத்திற்கு உள்ளேயே இந்த பணி நடந்து வந்தது. இதற்காக வீட்டு வளாகத்தில் இருந்து லாரி லாரியாக மண் அள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில், 2 மாடி கட்டிடம் நேற்று மாலை திடீரென சரிய தொடங்கியது. இதனால், வீட்டில் இருந்த வாடகைதாரர்கள் அலறி அடித்து வெளியே ஓடி வந்தனர். தகவலறிந்து தேனாம்பேட்டை தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பாதுகாப்பு கருதி இந்த கட்டிடம் விரைவில் இடிக்கப்படும் என்று கூறப்படுகிறது. எனினும் யாருக்கும் உயிர்ச் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
திடீரென இடிந்து விழுந்த 5 மாடி கட்டடம்.. இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருக்க சான்ஸ்.. டெல்லி சோகம்












Click it and Unblock the Notifications