For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குரங்கணி காட்டுத் தீயில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10-ஆக அதிகரிப்பு

குரங்கணி காட்டுத் தீயில் 9 பேர் உயிரிழந்ததாக தேனி ஆட்சியர் பல்லவி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    தேனி மாவட்ட ஆட்சியர் பேட்டி-வீடியோ

    தேனி: தேனி மாவட்டம் குரங்கணி வனப்பகுதியில் நடைபெற்ற காட்டுத் தீயில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10-ஆக அதிகரித்துள்ளது.

    குரங்கணி வனப்பகுதிக்கு மலையேற்ற பயிற்சிக்கு 36 பேர் வரை சென்றனர். அவர்களுள் 27 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். நேற்றைய தினம் அங்கு காட்டுத் தீ மளமளவென பற்றி எரிந்தது.

    Theni Collector Pallavi officially announces that 9 were died

    அப்போது மலையேற்ற பயிற்சிக்கு சென்றவர்கள் நாலாப்புறமும் சிதறி ஓடினர். இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட நிர்வாகம் அவர்களை மீட்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டது.

    அவர்களில் 27 பேரில் 10 பேர் எவ்வித காயமின்றி மீட்கப்பட்டுவிட்டனர். இந்த விபத்தில் 9 பேர் தீயில் கருகி பலியாகி விட்டதாக தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

    அவர்களில் சென்னையை சேர்ந்த அகிலா, பிரேமலதா, புனிதா, சுபா, அருண், விபின் ஆகிய 6 பேரும், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த விஜயா, விவேக், தமிழ்ச் செல்வி ஆகிய 3 பேரும் மொத்தம் சேர்த்து 9 பேர் வரை உயிரிழந்துவிட்டதாக ஆட்சியர் கூறியுள்ளார்.

    இந்நிலையில் குரங்கணியிலிருந்து மீட்கப்பட்டவர்களில் சென்னை வேளச்சேரியை சேர்ந்த நிஷா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். இதனால் குரங்கணி மலை பகுதியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10-ஆக உயர்ந்துவிட்டது.

    English summary
    Theni Collector Pallavi officially announces that 9 dies in the Theni forest fire. 6 belongs to Chennai and 3 belongs to Erode District.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X