ஆட்டுக்கறி 42 கிலோ.. கிச்சனில் டக்குனு நுழைந்த ஆபீசர்ஸ்.. குற்றாலம் பார்டர் ரோட்டில் ஒரே பரபரப்பு
தென்காசி: தென்காசி குற்றாலத்துக்கு சென்ற சுற்றுலா பயணிகளுக்கு பெருத்த அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. என்ன நடந்தது அங்குள்ள ஓட்டலில்?
தென்காசி மாவட்டம் பிரானூர் பார்டரில் செயல்பட்டு வருவது என்எஸ்கே உணவகம்.. இந்த சுற்றுவட்டார பகுதியிலேயே இந்த ஓட்டல்தான் படுஃபேமஸ்.. இது ஒரு அசைவ ஓட்டலாகும்.

குற்றாலத்திற்கு யார் வந்தாலும், இந்த ஓட்டலில் சாப்பிடாமல் போகமாட்டார்கள்.. குற்றாலத்தில் சீசனே இல்லாவிட்டாலும்கூட, இந்த ஓட்டலுக்காகவே பலர் கிளம்பி வந்துவிடுவார்கள். அந்த அளவுக்கு, தனி கஸ்டமர்களை இந்த ஓட்டல் பிரத்யேகமாக சம்பாதித்து வைத்துள்ளது.
கஸ்டமர்களாக இல்லாதவர்கள்கூட, அந்த வழியே வாகனங்களில் செல்லும்போது, ஓட்டலில் உள்ள கூட்டத்தை பார்த்து வண்டியை நிறுத்திவிடுவார்கள்.. அப்படிப்பட்ட ஓட்டலில்தான் ஒரு பகீர் சம்பவம் நடந்துள்ளது.
சாரல் மழை: குற்றாலத்தில் தென்மேற்கு பருவமழை காலமான ஜுன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 3 மாதமும், சாரல் மழை பொழிவது வழக்கம்.. இந்த சாரல் மழையை அனுபவிப்பதற்காகவும், இதுபோன்ற தருணங்களில் அருவிகளில் குளிப்பதற்காகவும், வருடந்தோறும் சுமார் 80 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கமாக இருந்து வருகிறது
பயணிகள்: அப்படித்தான், இந்த வருடம் தென்மேற்கு பருவமழை சீசன் ஆரம்பித்துள்ளது. அருவிகளில் நீர்வரத்தும் பெருகி உள்ளதால், சுற்றுலா பயணிகளும் திரண்டு வந்து கொண்டிருக்கிறார்கள். வழக்கம்போல, நேற்றும் பயணிகள் கூட்டம் அலைமோதியது.. வழக்கம்போல், பிரானுர் பார்டரிலுள்ள என்.எஸ்.கே. ஓட்டலுக்கும் பலர் சென்றுள்ளனர்.
அந்த நேரம்பார்த்து, உணவுத்துறை அதிகாரிகள் வந்துள்ளனர்.. மாவட்ட வட்டார உணவு பொருட்கள் கலப்பட தடுப்பு பிரிவு அதிகாரி நாக சுப்பிரமணியன் தலைமையிலான அதிகாரிகள் திடீரென ஓட்டலுக்குள் நுழைந்து ஆய்வு செய்திருக்கிறார்கள். அப்போது கிச்சனில், சமைப்பதற்காக வைத்திருந்த ஆட்டுக்கறி கெட்டுப்போயிருப்பதை பார்த்து அதிர்ந்து போனார்கள். மொத்தம் 42 கிலோ கறி இருந்திருக்கிறது.
வார்னிங்: இதைத்தவிர, மேலும் சில உணவுப்பொருட்களும் கெட்டுப்போயிருந்ததால், அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.. இறைச்சி உள்ளிட்ட கெட்டுப்போன உணவுப்பொருட்களை கொண்டுவந்து வெளியே கொட்டி, பினாயில் ஊற்றி அழித்தனர். பிறகு, ஓட்டல் நிர்வாகம் தரப்பில் எச்சரிக்கை தந்துவிட்டு, தொடர்ந்து இதுபோன்று சோதனைகள் நடைபெறும் என்றும் சொல்லிவிட்டு போனார்கள். நம்பி சாப்பிட போனால், இப்படியா? என்று கஸ்டமர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனராம்.












Click it and Unblock the Notifications