"இந்தியாவுக்கு தேசிய மொழியே கிடையாது"- குஜராத் ஹைகோர்ட் சொல்லி நாலுவருடம் ஆச்சு..
சென்னை: சமூக வலைத்தளங்களில் இந்தி மொழி பயன்பாடு குறித்த சர்ச்சை வெடித்துள்ள நிலையில், இந்தியாவுக்கென்று பிரத்யேக தேசிய மொழி கிடையாது என்ற தகவல் பலருக்கும் தெரியாமல் உள்ளது. ஆனால் இந்த தகவலை உறுதிபடுத்தியிருப்பது மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தின் உயர்நீதிமன்றம் என்பது இதில் மேலும் ஆச்சரியமான தகவலாகும்.

குஜராத் உயர்நீதிமன்றத்தில், 2009ம் ஆண்டு, சுரேஷ் கச்சாடியா என்பவர் ஒரு பொது நல வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், "இந்தியாவின் தேசிய மொழி இந்தி. நாட்டின் பெரும்பாலான மக்கள் இந்திதான் பேசுகிறார்கள். எனவே, இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் அட்டையின்மீது இந்தி மொழியில் அப்பொருள் குறித்த விவரங்களை பொரிப்பதை கட்டாயமாக்க வேண்டும். குறிப்பாக, பொருட்களின் விலை, பொருளின் உள்ளடக்கம், தயாரிப்பு தேதி போன்றவை இந்தியில் எழுதப்பட வேண்டியது கட்டாயமாக்கப்பட்டால்தான் பெருவாரியான மக்களுக்கு தாங்கள் என்ன சாப்பிடுகிறோம் என்பதை தெரிந்துகொள்ள முடியும்" என்று குறிப்பிட்டிருந்தார்.
நீதிபதி எஸ்.ஜே.முகோபாத்யாயா இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டார். விசாரணையில் வாதவிவாதங்களை கேட்ட கோர்ட், 2010ல் வழங்கிய தனது தீர்ப்பின்போது, "இந்திதான், இந்தியாவின் தேசிய மொழி, அதுதான் அலுவல் மொழி, என்பதற்கான ஏதாவது அறிவிக்கைகள் வெளியாகியுள்ளனவா? இதுதொடர்பான அரசாணை கோர்ட்டில் தாக்கல்செய்யப்படவில்லை. இந்திய அரசியலமைப்பு சட்டம், இந்தியை ஒரு அலுவல் மொழியாக மட்டுமே குறிப்பிடுகிறதே தவிர, தேசிய மொழியாக கிடையாது. எனவே, உற்பத்தியாளர்களுக்கோ, அரசுக்கோ, தயாரிப்பு பொருட்களின்மீது இந்தியில் கட்டாயமாக பொருள் குறித்த விவரம் எழுதப்பட வேண்டும் என்று உத்தரவிட முடியாது" என்று தீர்ப்பளித்தது.
தேசிய மொழி அந்தஸ்தில் இல்லாத இந்தியும், பிற மொழிகளைப்போலதான் கருதப்பட வேண்டும். எனவே இந்தியை அரசு நடைமுறைகளில் கட்டாயப்படுத்த முடியாது என்பதையும், இந்த தீர்ப்பு அறுதியிட்டு கூறியுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications