தமிழகத்தில் பிளாஸ்டிக் அரிசி என்ற பேச்சுக்கே இடமில்லை.. அமைச்சர் காமராஜ் உறுதி!
தமிழகத்தில் பிளாஸ்டிக் அரிசி என்ற பேச்சுக்கே இடமில்லை என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழகத்தில் பிளாஸ்டிக் அரிசி என்ற பேச்சுக்கே இடமில்லை என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். பிளாஸ்டிக் அரிசி விற்பனை குறித்து புகார் அளித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுவதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன. பிளாஸ்டிக் அரிசியில் பந்து செய்து சிறுவர்கள் விளையாடும் வீடியோவும் வெளியானது.

இதைத்தொடர்ந்து தமிழகத்திலும் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யபடுவதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அமைச்சர் காமராஜ் பேட்டியளித்தார்.
அப்போது தமிழகத்தில் பிளாஸ்டிக் அரிசி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அவர் கூறினார். தமிழகத்தில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
தமிழகத்தில் ரேஷன் கடையில் மலிவு விலையில் அரிசி விற்பனை செய்யப்படுவதால் கலப்படம் செய்ய வாய்ப்பில்லை என்றும் அவர் கூறினார். மேலும் பிளாஸ்டிக் அரிசி விற்பனை இதுவரை எந்த புகாரும் வரவில்லை என்று கூறிய அவர், புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.












Click it and Unblock the Notifications