டிடிவி.தினகரனுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை: சிவி சண்முகம் அந்தர் பல்டி!
டிடிவி தினகரனுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அமைச்சர் சிவி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
சென்னை: டிடிவி தினகரனுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அமைச்சர் சிவி.சண்முகம் தெரிவித்துள்ளார். மேலும் டிடிவி தினகரனை நாங்கள் ஒதுக்கிவிட்டோம் என்றும் அவர் கூறினார்.
அதிமுக அம்மா அணியின் துணை பொதுச்செயலாளரும் சசிகலாவின் அக்காள் மகனுமான டிடிவி தினகரன் இரட்டை இலைச்சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்த புகாரில் நேற்று நள்ளிரவு டெல்லி போலீசால் கைது செய்யப்பட்டார். இன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
இந்நிலையில் எடப்பாடி அணியினருக்கும் ஓபிஎஸ் அணியினருக்கும் இடையே இன்று பேச்சு வார்த்தை நடைபெறும் அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அமைச்சர் சிவி.சண்முகம் செய்தியாளர்களிடம் பேசினார்.

இரு அணிகளும் பேச்சுவார்த்தை
அப்போது இன்று நல்ல நாள் என்பதால் வைத்திலிங்கம் தலைமையிலான குழு ஒபிஎஸ் அணியினருடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அவர் கூறினார்.மேலும் டிடிவி தினகரன் கைது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

எந்த சம்பந்தமும் இல்லை
அதற்கு பதிலளித்த அமைச்சர் சி.வி.சண்முகம், டிடிவி தினகரனுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றார். நாங்கள் டிடிவி தினகரனை கட்சியை விட்டு ஒதுக்கி வைத்துவிட்டோம் என்றும் அவர் கூறினார்.

அவரே சந்தித்து கொள்வார்
டிடிவி தினகரன் மீதனா வழக்கை அவர் சட்டப்படி சந்தித்துக்கொள்வார் என்றும் சிவி.சண்முகம் கூறினார். மேலும் ஓபிஎஸ் அணியினரின் நிபந்தனை குறித்த கேள்விக்கு அதுகுறித்து அமர்ந்து பேசுவோம் என்றும் பேச்சுவார்த்தை பிறகே எதையும் அறிவிப்போம் என்றும் அமைச்சர் சிவி.சண்முகம் கூறினார்.

அம்மா என புரோமோஷன் கொடுத்தவர்
அண்மையில் சசிகலா குடும்பத்தினரை கட்சியை விட்டு ஒதுக்கி வைப்பதாக அமைச்சர்கள் அறிவித்த போது டிடிவி தினகரனால் அதிமுகவுக்கு ஆபத்து உள்ளது என கூறியவர் சி.வி.சண்முகம். சசிகலாவுடனான மோதலின் போது ஓபிஎஸை கருங்காளி என்று, சசிகலா சின்னம்மா அல்ல அம்மா என புரோமோஷன் கொடுத்தவரும் இந்த சிவி.சண்முகம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
-
“நீ நல்லா சாப்பிட்டிருக்க.. நான் சாப்பிடல”.. பயணியிடம் சம்பந்தமே இல்லாமல் பேசிய அமைச்சர் பார்த்திபன் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications