கன்னியாகுமரி கடற்பகுதியில் மேலடுக்கு சுழற்சி: தென் மாவட்டங்களில் மீண்டும் மழை!
கன்னியாகுமரி கடற்பகுதியில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சியால் தென் மாவட்டங்களில் மீண்டும் மழை பெய்து வருகிறது.
சென்னை: கன்னியாகுமரி கடற்பகுதியில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சியால் தென் மாவட்டங்களில் மீண்டும் மழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் வடகிழக்குப் பருவமழை தொடங்கியது. தொடக்கத்தில் ஓரளவுக்கு தொடங்கிய மழை பின்னர் ஓய்வெடுக்க தொடங்கிவிட்டது.
இந்நிலையில் வங்கக்கடலில் அண்மையில் உருவான ஓகி புயலால் கன்னியாகுமரி, நாகர்கோவில், திருநெல்வேலி, திண்டுக்கல், தேனி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் அணைகள், குளங்கள், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் வேகமாக நிரம்பின.

ஏமாற்றிய காற்றழுத்தம்..
இதைத்தொடர்ந்து அந்தமான் அருகே உருவான மற்றொரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியும் புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. இதனால் வடதமிழகத்திற்கு நல்ல மழை கிடைக்கும் என கூறப்பட்டது.

மழை பறிபோனது..
ஆனால் அந்த காற்றழுத்தம் வலுவிழந்த நிலையிலேயே காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி ஆந்திரா வழியாக ஒடிசா சென்றது. இதனால் வடதமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய மழை பறிபோனது.

அமைதியாக வங்கக்கடல்
சென்னை உள்ளிட்ட இடங்களில் கடும் பனிமூட்டம் தொடங்கியுள்ளது. மேலும் கடந்த சில நாட்களாக வங்க கடலில் அமைதியான சூழல் நிலவி வருகிறது.

தென் மாவட்டங்களில் மழை
இந்த நிலையில் கன்னியாகுமரி கடல் பகுதி மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, நெல்லை, நாகர்கோவில், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கடந்த 2 தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

மக்கள் மகிழ்ச்சி
இன்றும் தேனி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications