தேர்தல் நேரத்தில் உள்நோக்கத்தோடு சிபிஐ சோதனை நடந்துள்ளது: ஆ.ராசா விளக்கம்
சென்னை: தன் மீதான சி.பி.ஐ சோதனை அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.
2ஜி ஊழல் வழக்கில் சிக்கியுள்ள திமுகவின் முன்னாள் மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சரான ராசா வீடு மற்றும் அலுவலகங்களில் சில தினங்கள் முன்பு சிபிஐ சோதனை நடத்தியது. அவர் மீது வருவாய்க்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கும் புதிதாக தொடரப்பட்டது.

இது குறித்து அவர் இன்று சென்னையில் ராசா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சென்னை சிபிஐ பதிவு செய்துள்ள வழக்கில் உள்நோக்கம் உள்ளது, டெல்லி சிபிஐ மற்றும் சென்னை சிபிஐ அதிகாரகளுக்கு இடையே கருத்து மோதல் இருந்து வருகிறது.
நான் வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்க்கவில்லை என்று சிபிஐ, வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை ஆகியவை ஏற்கனவே, உச்சநீதிமன்றத்தில் தெளிவுபடுத்திவிட்டன.
இந்நிலையில்தான், சென்னை சிபிஐ என்மீது புதிய வழக்கை பதிவு செய்துள்ளது. சென்னை சிபிஐ மற்றும் டெல்லி சிபிஐ நடுவே ஒருங்கிணைப்பு இல்லை.
என் மீதான சிபிஐ சோதனை அரசியல் உள்நோக்கம் கொண்டது. வேண்டும்மென்றே எந்த முகாந்திரம் இன்றி தேர்தல் நேரத்தில் வழக்கு தொடர்கின்றனர். அனைத்து உன்மைகளையும் விளக்கி டெல்லி சிபிஐக்கு நான் கடிதம் எழுதியுள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications